அவலாஞ்சி ஏரி

அவலாஞ்சி ஏரி (Avalanche Lake) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஏரியாகும்.[1][2]

அவலாஞ்சி ஏரி Avalanche Lake
பனிச்சரிவு ஏரி
பனிச்சரிவு ஏரி
அமைவிடம்தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம்.
ஆள்கூறுகள்11°19′19″N 76°36′40″E / 11.322°N 76.611°E / 11.322; 76.611Coordinates: 11°19′19″N 76°36′40″E / 11.322°N 76.611°E / 11.322; 76.611
உறைவுஇல்லை
Islandsஇல்லை

சொற்பிறப்பு

இந்த ஏரி உள்ளபகுதியில் 1800 களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனிச்சரிவு என்னும் பொருளுள்ள அவலாஞ்சி (avalanche) என்ற பெயர் உண்டானது.[1]

சுற்றுலா

 
மலை உச்சியிலிருந்து அவலாஞ்சி ஏரியின் தோற்றம்

நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.[3] ஏரியைச் சுற்றிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள நிலப்பகுதியில் மக்னோலியசு, மல்லிகை, ரோடோடென்றான் எனப்படும் கொத்துக் கொத்தான மலர்கள் அழகாகப் பூத்துக்குலுங்குகின்றன.ஏரிக்கு அருகில் அதைச் சுற்றியுள்ள உள்ள பாதையில் சுற்றுலாப்பயணிகள் மெல்லிய காற்றின் துணையுடன் பயணிக்க முடியும்[1]. ஏரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மீன்பிடிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.[4]. ஏரிக்கு அருகே உள்ள மீன் குஞ்சு பொரிப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் தேவையான மீன்பிடிக்கும் தூண்டில்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றைப் பெற்று தாங்கே தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம்.[5] . ஏரியின் அருகில் சுற்றுலாப்பயணிகள் கூடாரங்களை அமைத்தும் தங்குகின்றனர் . ஏரிக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் மலையேறுவதும், ஏரியில் படகுச் சவாரி மேற்கொள்ளுவதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதர பொழுதுபோக்குகளாகும். [6] மேல் பவானி எனப்படும் பகுதி இத்தகைய மலையேற்றங்களுக்கு உகந்ததாகும். இங்கு அடர்த்தியான காடுகளும் வனவிலங்குகளும் உள்ளன[5]

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
ஊட்டி பனிச்சரிவு ஏரி
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 Shaji, K A (Feb 18, 2011). "Flowers in the window". The Times of India இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 27, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927191033/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-18/coimbatore/28614578_1_forest-orchids-meadows. பார்த்த நாள்: Sep 30, 2011. 
  2. "Avalanche Lake". traveldest.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. Ayub, Akber (May 29, 2011). "Footloose in the Nilgiris". The Hindu இம் மூலத்தில் இருந்து ஜூன் 10, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110610164324/http://www.hindu.com/mag/2011/05/29/stories/2011052950300800.htm. பார்த்த நாள்: Sep 30, 2011. 
  4. "Fishing in the Nilgiris". tamilnadutourism.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  5. 5.0 5.1 "Peaks of pleasure". Daily News and Analysis. 6 December 2007. http://www.dnaindia.com/entertainment/report_peaks-of-pleasure_1137638. பார்த்த நாள்: 30 September 2011. 
  6. Cycil, Chandrika (18 May 2002). "Adventure: Avalanche". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040105145051/http://www.hindu.com/thehindu/yw/2002/05/18/stories/2002051800060200.htm. பார்த்த நாள்: 30 September 2011. 
"https://tamilar.wiki/index.php?title=அவலாஞ்சி_ஏரி&oldid=41581" இருந்து மீள்விக்கப்பட்டது