அவர்கள் (திரைப்படம்)

அவர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுஜாதா, கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1]

அவர்கள்
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புபி. ஆர். கோவிந்தராஜன்
ஜெ. துரைசாமி
கதைகே. பாலச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுஜாதா
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
வெளியீடுபெப்ரவரி 25, 1977 (1977-02-25)
ஓட்டம்167 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் தெலுங்கில் 'இதி கத காடு' எனும் பெயரில் 1979 ஆண்டில் மீண்டும் கே. பாலச்சந்தர் அவர்களால் எடுக்கப்பட்டது, அத்திரைப்படத்திலும் கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். சுஜாதா கதாபாத்திரத்தில் ஜெயசுதாவும் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவியும் நடித்தனர்.

கதை

அனு (சுஜாதா) சூழ்நிலைகளால் தன் காதலன் பரணியை (ரவிகுமார்) பிரிந்து, ராமநாதனை (ரஜினிகாந்த்) கைப்பிடிக்கிறாள். அனுவின் காதலை அறிந்திருக்கும் அனுவை மணக்கும் ராமநாதன், அவளைக் கொடுமைபடுத்துகிறான். கொடுமையை தாங்காமல் ஒரு கட்டத்தில், அவள் விவாகரத்து பெறுகிறாள். மீண்டும் சூழ்நிலைகளால், பரணியைச் சந்திக்கிறாள் அனு. அனுவின் நினைவாகவே காலத்தைக் கடத்தும் பரணி, இப்போதும் அனுவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறான். அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். அப்போது அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் குறுக்கிடுகிறான் ராமநாதன். இந்நிலையில், அனு பணியாற்றும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஜானி (எ) ஜனார்த்தனன் (கமல்) ஒரு தலையாக அனுவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ஜானியின் மனைவி தீ விபத்தில் இறந்துவிட்டவள். ஒரு புறம் மாஜி கணவன், இன்னொரு புறம் மாஜி காதலன், மூன்றாவதாக, அவளைத் தன் மனைவிபோலக் கருதும் நண்பன். கடைசியில் யார் யாரோடு சேர்ந்தார்கள் என்பதை, கதையின் முடிவு

நடிகர்கள்

பாடல்கள்

அவர்கள்
திரைப்பட ஒலிப்பதிவு
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
நீளம்19:54
இசைத்தட்டு நிறுவனம்இ. எம். ஐ. (EMI)
இசைத் தயாரிப்பாளர்எம். எஸ். விஸ்வநாதன்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கண்ணதாசன் அனைத்துப் பாடல் வரிகளையும் எழுதியிருந்தார்.

எண். பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 அங்கும் இங்கும் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம் கண்ணதாசன் 3:31
2 கங்கையிலே நீர் ... எஸ். ஜானகி கண்ணதாசன் 1:53
3 இப்படியோர்த் தாலாட்டு ... எஸ். ஜானகி கண்ணதாசன் 4:14
4 ஜுனியர் ஜுனியர் ... எஸ். பி. பாலசுப்பிரமணியம், சதண் கண்ணதாசன் 6:01
5 காற்றுக்கென்ன வேலி ... எஸ். ஜானகி கண்ணதாசன் 4:15

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அவர்கள்_(திரைப்படம்)&oldid=30245" இருந்து மீள்விக்கப்பட்டது