அழுகணிச் சித்தர்

அழுகணிச் சித்தர் என்பவர் தமிழ் நாட்டுச் சித்தர்களில் ஒருவர். தத்துவப் பொருளை உருவகமாகப் பாடியவர். துன்பச் சுவை மிகைப்படப் பாடுவதால் அழுகணிச் சித்தர் எனப் பெயர் பெற்றார் எனக் கூறுவர். இவரது பாடல்கள் அழுகணிச் சித்தர் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டுள்ளன.

அழுகணிச் சித்தர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அழுகணிச் சித்தர் பாடல்கள்
மொழிதமிழ்

இவரது வரலாறோ அன்றிக் காலமோ துணிய முடியாதனவாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகிலுள்ள அருள்மிகு திருமலை நம்பி திருக்கோவில் முன்புறம் உள்ள புளிய மரத்துக்கு அடியில் அவர் வசிப்பதாக கருதப்படுகிறது.

"https://tamilar.wiki/index.php?title=அழுகணிச்_சித்தர்&oldid=27953" இருந்து மீள்விக்கப்பட்டது