அழிவின் அழைப்பிதழ்
இது 1994 முதல் பதிப்பாக மித்திர பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
---|---|
பதிப்பாசிரியர் | ச. பொன்னுத்துரை |
குரல் கொடுத்தவர் |
பிரிதா |
உண்மையான தலைப்பு |
அழிவின் அழைப்பிதழ் |
செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
அழிவின் அழைப்பிதழ் |
நாடு | நோர்வே |
மொழி | தமிழ் |
வெளியீட்டு எண் |
3 |
பொருண்மை | எய்ட்ஸ் |
வெளியிடப்பட்டது | முதல் பதிப்பு 1994 மூன்றாம் பதிப்பு July 10, 2021 |
ஊடக வகை |
புத்தகம், ஒலிப்புத்தகம் |
பக்கங்கள் | 142 |
பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
978-1105401596 |
அடுத்த நூல் |
நாளை |
நோர்வேயில் இருந்து 1994 ஆம் ஆண்டு வெளிவந்த முதற்தமிழ் நாவல் இது. புலம் பெயர்ந்த நாட்டில் தனிமையினால் ஏற்படும் சோகங்களைப் பல
பரிமாணங்களில் நோக்கும் இந்த நாவல் இரண்டாம் பதிப்பாக 2008 பதிப்பிக்கப்பட்டது. இந்த நாவல் எய்ட்சை மையமாக வைத்து பின்னப்பட்டதோடு தமிழ் சமுதாயம் அதன் பிடில் அகப்படாது இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையை தகுந்த காலத்தில் தமிழுலகிற்கு தந்தது. அத்தோடு நின்றுவிடாது சமுதாயத்தில் புரையோடியுள்ள மற்றும் பிரச்சனைகளையும் இந்த நாவல் பேசுகிறது.
"எய்ட்சை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அபாயம் என்கிறார்கள். மிகப்பெரிய பிரச்சனை என்று பேசுகிறார்கள். பிரச்சனை அல்ல சவால் என்று நான் எண்ணுகிறேன். பிரச்சினையோ, சவாலோ, எய்ட்ஸ் விவாதங்களுக்கும் போதனைகளுக்கும் மடை திறந்து விட்டிருக்கிறது. ஒழுக்கத்தைப் போதிக்க வந்த ஒரு நல்லூழாக மத அடிப்படைவாதிகள், moralist--களும் கருதுகிறார்கள். ரசிகர்கள் ஆணுறையின் அவசியத்தை வலியுறுத்தும் வாய்ப்பாக விஞ்ஞான மனோபாவம் கொண்டவர்கள் எண்ணுகிறார்கள். இலக்கியவாதி தியாகலிங்கம் கலாச்சாரத்தை அலசப் பயன்படுத்திக் கொள்கிறார்."
என்று மாலனால் விதந்துரைக்கப்படும் இந்த நாவல் எய்ட்சைப் பற்றிப் பேசுவதோடு தமிழ் காரசாரத்தின் கொடுமைகளை நவீன ஈழத்துத் தமிழ் இளைஞன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் எடுத்துரைக்கிறது.