அல் பிக்ஃ (இதழ்)

அல் பிக்ஃ என்பது இலங்கையின் மேல் மாகாணத்தில் கொழும்பு நகரிலிருந்து 1989ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய இருமாத இதழாகும்.

பொருள்

'அல் பிக்ஃ' என்பது அரபு மொழிச் சொல்லாகும். இதன் தமிழ்க்கருத்து 'மார்க்க ஞானம்' என்பதாகும்.

சிறப்பு

ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வெளிவந்த ஒரே இஸ்லாமிய இதழ். இசுலாமியக் கருத்துக்களை ஆதாரபூர்வமாக முன்வைத்தல், எளிய நடையில் பாமர மக்களும் விளங்கத்தக்க வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுதல் ஆகியன இதன் சிறப்புகளாகக் கூறப்படுகின்றது.

உள்ளடக்கம்

இசுலாமியக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், குர்ஆன் விளக்கவுரை, வரலாற்றுச் சான்றுகள், வினா - விடை போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக வெளிவருகிறது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=அல்_பிக்ஃ_(இதழ்)&oldid=14687" இருந்து மீள்விக்கப்பட்டது