அல்லங் கீரனார்

அல்லங் கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடலர் ஒன்றே ஒன்ற இடம்பெற்றுள்ளது. (நற்றிணை: 245 நெய்தல்.)

பாடல் தரும் செய்தி

தலைவி கடலிலே நீராடியபோது தலைவன் பார்த்தான். அவள் அழகிலே மயங்கி அவளது இல்லத்துக்கே வந்து வணங்கி நிற்கிறான். அதனைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

சொல்லும் செய்தி

அவன் தொழுது நிற்பதைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது.

அன்று முண்டகப் பூக் கோதையை உன் ஐம்பால் கூந்தலில் வண்டகள் மொய்க்கும்படி சூடிக்கொண்டிருந்தாய். நாம் கடலிலே நீராடினோம். அவன் வந்தான். பின் நீ அவனோடும் நீராடினாய். இன்று அவன் நம் இல்லத்துக்கே வந்துவிட்டான். தொழுதுகொண்டு நின்று வேண்டிக் கேட்கின்றான்.

அகன்ற இடுப்புறுப்பும், தெளிவான இனிய வாய்மொழியும் கொண்ட நீ யார் ஐயோய்(=மென்மையானவளே) என்கின்றான்.

தான் குதிரைமேல் ஏறி வந்தான். அப்போது குதிரை அணங்குதல்(= வருந்துதல்) அவனுக்குத் தெரியவில்லை. தான் அணங்கியதாகக் கூறுகிறான். உன் முகத்தைப் பார்க்கிறான்.

அதுதான் சிரிப்பு வருகிறது.

"https://tamilar.wiki/index.php?title=அல்லங்_கீரனார்&oldid=12303" இருந்து மீள்விக்கப்பட்டது