அலிசா அப்துல்லா

அலிசா அப்துல்லா (Alisha Abdullah பிறப்பு:சூலை 24, 1989) இந்திய தானுந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் வாகையாளர் ஆவார்.[1]

அலிசா அப்துல்லா
பிறப்பு24 சூலை 1989 (1989-07-24) (அகவை 35)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்புனித கெவின் பள்ளி, சேக்ரட் ஹார்ட் , சர்ச் பார்க், எம். ஓ. பி. வைஷ்ணவி பெண்கள் கல்லூரி
வாழ்க்கைத்
துணை
தீபக் தேவராஜ் (விவாகரத்து ஆனது)

ஆரம்பகால வாழ்க்கை

சிறுவயது முதலே பந்தயங்களில் ஆர்வமாக இருந்தார். ஒன்பது வயது முதல் உள்ளரங்க கார்ட்டு பந்தயங்களில் இவர் விளையாடி வருகிறார். பதினோராவது வயதில் அதில் வெற்றி பெற்றார். பதின்மூன்று வயதாக இருக்கும் போது தேசிய அளவிலான உள்ளரங்க கார்ட் பந்தயங்களில் இவர் வெற்றி பெற்றார் புனித கெவின் பள்ளியில் தனது துவக்க கல்வியைப் பயின்ற இவர் சேக்ரட் ஹார்ட் , சர்ச் பார்க்கில் மேல்நிலைக் கல்வியைப் பயின்றார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள எம். ஓ. பி. வைஷ்ணவி பெண்கள் கல்லூரியில் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றார்.

திரைத் துறை

ஆண்டு திரைப்படம் வேடம் மொழி குறிப்புகள் சான்று
2014 இரும்புக் குதிரை எதிராளியின்

உதவியாளர்

தமிழ் [2]

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=அலிசா_அப்துல்லா&oldid=25624" இருந்து மீள்விக்கப்பட்டது