அறுகம் குடா
அறுகம் குடா (Arugam Bay) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம். இங்கு அதிக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால் அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது.[1] அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கிமீ தொலைவில் உள்ளது.
அறுகம் குடா | |
---|---|
நகரம் |
அறுகம் குடாக் கடற்கரையை ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்களில் ஒன்றாக பயண வழிகாட்டி நூலான "த லோன்லி பிளானட்" அறிவித்துள்ளது.[2]
அலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது
அறுகம் குடா கடலில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடக்கிறது. அலைச்சறுக்கிற்கு தேவையான படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் மக்களின் ஒரு தொழிலாகவே உள்ளது. சி.என்.என் தொலைக்காட்சி 2013இல் வெளியிட்ட அலைச்சறுக்கு விளையாட்டிற்கு உலகின் சிறந்த 50 இடங்களில் ஒன்றாக அறுகம் குடா இடம் பெற்றிருந்தது.[3]