அர்ச்சனா ரவி

அர்ச்சனா ரவி (பிறப்பு 17 ஜூன் 1996) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த விளம்பர மாதிரிப் பெண்ணும், அழகுப் போட்டியாளரும், நடிகையும் பாரம்பரிய நடனக் கலைஞருமாவார்.[1] பல்வேறு அழகிப்போட்டிகளில் பட்டம் வென்றுள்ள இவர், பிப்ரவரி 2019 இல், குழந்தைகளை மேம்படுத்துவதற்காக "நண்பர் திட்டம்" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.[2]

அர்ச்சனா ரவி
பிறப்பு17 சூன் 1996 (1996-06-17) (அகவை 28)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
பணி
  • நடிகை
  • விளம்பர மாதிரிப்பெண்
  • அழகுப் போட்டிகளின் வெற்றியாளர்
உயரம்5 அடி 7 அங் (1.70 m)
அழகுப் போட்டி வாகையாளர்
தலைமுடி வண்ணம்பழுப்பு-கருப்பு
விழிமணி வண்ணம்பழுப்பு
முக்கிய
போட்டி(கள்)
மிஸ் சவுத் இந்தியா 2016
(இரண்டாம் இடம்)
மிஸ் சூப்பர் குளோப் இன்டர்நேஷனல் 2018
(இரண்டாம் இடம்)
ஃபெமினா மிஸ் இந்தியா கேரளா 2019
(முதல் மூவரில் ஒருவராக)
மிஸ் திவா 2020
(முதல் பத்து பேரில் ஒருவராக)
கிளாமானண்ட் சூப்பர்மாடல் இந்தியா 2021
(முதல் எட்டு பேரில் ஒருவராக)

தொழில் வாழ்க்கை

விளம்பரங்களில் மாதிரிப்பெண்ணாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய அர்ச்சனா, அதன் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான அட்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாயுள்ளார் [3] தொடர்ந்து விளம்பரங்களில் நடித்ததோடு இல்லாமல், பல்வேறு உலக, இந்திய, மாநில அழகிப்போட்டிகளில் பங்கேற்று இளைஞர்களின் சின்னமாக மாறியுள்ளார்.[4] ஃபெமினா மிஸ் இந்தியா 2019 கேரளா போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியில் முதல் மூன்று மிஸ் இந்தியா கேரளாவில் ஒருவராக வென்றுள்ளார்.[5] பின்னர் அவர் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2020 அழகிப்போட்டியில் பங்கெடுத்து முதல் பத்து பேரில் ஒருவராக,  இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2021 ஆம் ஆண்டில், மிஸ் இன்டர்நேஷனல் 2021 அழகிப்போட்டி மற்றும் மிஸ் மல்டிநேஷனல் 2021 அழகிப்போட்டிக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் 2021 பதிப்பிற்கான கிளாமனண்ட் சூப்பர்மாடல் என்ற தகுதிபோட்டியில் வென்று, இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரைப்படவியல்

ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2017 அட்டு சுந்தரி தமிழ் அறிமுக படம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அர்ச்சனா_ரவி&oldid=22337" இருந்து மீள்விக்கப்பட்டது