அருவந்தை
அரிசில் கிழார் கல்லாடனார் என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் அருவந்தை வள்ளலைக் கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். புறம் 385 கல்லாடனார் வாழ்ந்த கல்லாடம் திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.