அரும்பத உரையாசிரியர்
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், தனது உரைக்கு அடிப்படையாகக் கொண்ட உரை ஒன்று உள்ளது. இதை எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனாலும், இவரது உரையில் அரும் பதங்கள் பலவற்றுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் காரணமாக இவரது பெயர் அரும்பத உரையாசிரியர் என வழங்கப்பட்டு வருகிறது.