அருண் விஜயராணி

அருண் விஜயராணி
அருண். விஜயராணி.gif
முழுப்பெயர் அருண்
விஜயராணி
பிறப்பு விஜயராணி
செல்லத்துரை
16-03-1954
உரும்பிராய் ,
யாழ்ப்பாணம்
மறைவு 13-12-2015
(அகவை 61)
மெல்பேர்ண்,
ஆத்திரேலியா
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
பெற்றோர் கே. ரி. செல்வத்துரை
சிவபாக்கியம்
வாழ்க்கைத்
துணை
அருணகிரி


அருண் விஜயராணி (16 மார்ச் 1954 - 13 டிசம்பர் 2015) புலம்பெயர்ந்த மூத்த பெண் படைப்பாளிகளில் ஒருவர். 1989 ஆம் ஆண்டில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அருண் விஜயராணி யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மத்திய கிழக்கு நாடுகளிலும் இங்கிலாந்திலும் சில காலம் வசித்திருக்கும் அருண். விஜயராணி 1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் வசித்து வந்தார். இவரது தந்தையார் பிரபல ஓவியர் செல்லத்துரை. விஜயராணி செல்லத்துரை என்ற பெயரிலேயே இவரது ஆக்கங்கள் முன்பு வெளியாகின. அருணகிரி என்பவரை மணந்ததன் பின்னர், அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதி வந்தார்.

இலக்கிய உலகில்

1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் "அவன் வரும்வரை" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது "விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்" என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.

இலங்கை வானொலியில் சிறுகதைகள், சிந்தனைக்கட்டுரைகள், இசையும் கதையும், நாடகங்கள், தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன. ”தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன" என்ற இவரது வானொலி நாடகம், துணை என்ற பெயரில் ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக பி. விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார்.

அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலி, இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.

அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு இலக்கிய சிற்றிதழின் ஆசிரியராகவும் அருண். விஜயராணி பணியாற்றியுள்ளார். அத்துடன் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

விருதுகள்

மெல்பன் தமிழ்ச்சங்கம் இவரது பணிகளைப்பாராட்டி 2005 ஆம் ஆண்டு விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வெளிவந்த நூல்கள்

  • கன்னிகா தானங்கள் (சிறுகதைத் தொகுதி) தமிழ்ப்புத்தகாலயம், 1990, சென்னை

ஆதாரங்கள்

  • ஞானம் நேர்காணல் - 2001 ஜனவரி
"https://tamilar.wiki/index.php?title=அருண்_விஜயராணி&oldid=1916" இருந்து மீள்விக்கப்பட்டது