அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்
அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் (பிறப்பு: 1948) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் ஆவார்.
அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் |
---|---|
பிறந்ததிகதி | 1948 |
இசை வாழ்க்கை
பழனிவேல் ஆரம்ப காலத்தில் தனது தந்தையார் எஸ். குமாரவேலிடம் தவில் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 1959 ஆம் ஆண்டு முதல் டி. ஜி. முத்துக்குமார சுவாமிப் பிள்ளையிடமிருந்து இசைப் பயிற்சியினைப் பெற்றார். இவர் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்து 'ஒருங்கிணைந்த வாத்திய இசை' நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 2001[1]
- பத்மசிறீ விருது
- இசைப்பேரறிஞர் விருது, 2015. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2][3]
மேற்கோள்கள்
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ கலையும், கைத் தொழிலும் கட்டாயப் பாடமாக வேண்டும்: கவிஞர் வைரமுத்து
- ↑ "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 22 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/awards.php. பார்த்த நாள்: 22 டிசம்பர் 2018.