அரபா நகர்

அரபா நகர் என்பது மூதூர் தொகுதுயில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். மூதூர்த் தொகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினரான ஏ. எல். அப்துல் மஜீத் கொலனி எனும் குடியிருப்புப் பகுதியினை உருவாக்கிய போது (99,98,97,96,9...) 98 ஆம் கொலனிக்கு அரபா நகர் எனும் பெயரை வைத்தனர்.

பாடசாலைகள்

தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம்

1956 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பாடசாலை கொலனிப் பகுதியில் உள்ள மக்கள் யாவருக்கும் ஆரம்பக் கல்வியினைப் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டது. இது ஒரு கலவன் பாடசாலை ஆகும். இப்பாடசாலை ஆரம்பத்தில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரிலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பின்பு தி/அல்ஹிக்மா முஸ்லிம் வித்தியாலம் எனவும் தி/அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலம் எனவும் ஐம்பது ஆண்டுகளின் பின்னரே தர உயர்ச்சி பெற்றது. இப்பாடசாலை பொன்விழாவைக் கண்ட பாடசாலைகளில் ஒன்றாகும்.

"https://tamilar.wiki/index.php?title=அரபா_நகர்&oldid=39252" இருந்து மீள்விக்கப்பட்டது