அரண்மனை 4

அரண்மனை 4 (Aranmanai 4) என்பது சுந்தர் சி இயகத்தில் 2024இல் தமிழ் மொழியில் வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இப்படத்தின் கதையை வெங்கட் ராகவன் மற்றும் எஸ். பி. ராமதாஸ் ஆகியோருடன் சுந்தர் சி எழுதியிருந்தார். குஷ்பு சுந்தரின் அவினி சினிமேக்ஸ் மற்றும் ஏ. சி. எஸ். அருண் குமாரின் பென்ஸ் மீடியா (பி. எல். எல். லிமிடெட்) தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, தமன்னா பாட்டியா, ராசி கன்னா, ராமச்சந்திர ராஜு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒரு பகுதி தெலுங்கில் பாக் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் நடித்த காட்சிகளுக்கு பதிலாக வெண்ணிலா கிசோர் மற்றும் சீனிவாச ரெட்டி நடித்தனர். இது அரண்மனை திரைப்படத் தொடரின் நான்காவது பாகமாகும். படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார், இ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவையும் பென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் மேற்கொண்டனர்.

அரண்மனை 4
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்பு
கதை
  • சுந்தர் சி
  • வெங்கட் ராகவன்
  • எஸ். பி. ராமதாஸ்
திரைக்கதை
  • சுந்தர் சி
  • வெங்கட் ராகவன் (கூடுதல்)
இசைஹிப்ஹாப் தமிழா
நடிப்பு
ஒளிப்பதிவுஇ. கிருஷ்ணசாமி
படத்தொகுப்புபென்னி ஆலிவர்
கலையகம்
வெளியீடு3 மே 2024 (2024-05-03)
ஓட்டம்
  • 147 நிமிடங்கள் (தமிழ்)[1]:0:00
  • 150 நிமிடங்கள் (தெலுங்கு)[2]:0:00
நாடுஇந்தியா
மொழி
  • தமிழ்
  • தெலுங்கு
ஆக்கச்செலவு₹30 கோடி[3]
மொத்த வருவாய்₹100.50 கோடி[4]

வெளியீடு

இப்படம் திரையரங்குகளில் 3 மே 2024 அன்று வெளியிடப்பட்டது. மேலும் விமர்சகர்களிடமிருந்து கலவையான மற்றும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 30 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்யப்பட்ட தமிழ் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.[5]

மேற்கோள்கள்

  1. Aranmanai 4. அவினி சினிமேக்ஸ். 21 June 2024. https://web.archive.org/web/20240621130629/https://www.hotstar.com/in/movies/aranmanai-4/1271318666 from the original on 21 June 2024. Retrieved 21 June 2024 – via ஹாட் ஸ்டார். {{cite AV media}}: |archive-url= missing title (help)
  2. Baak (in తెలుగు). அவினி சினிமேக்ஸ். 21 June 2024. Retrieved 21 June 2024 – via ஹாட் ஸ்டார்.
  3. Panwar, Rosy (29 May 2024). "Aranmanai 4 ने 30 करोड़ में की 100 करोड़ की कमाई, खूबसूरत Tamannaah ने खूब डराया" (in hi) இம் மூலத்தில் இருந்து 30 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240530191856/https://ndtv.in/webstories/entertainment/aranmanai-4-crosses-100-crore-tamannaah-bhatia-share-photos-18088. 
  4. Singh, Jatinder (June 10, 2024). "Aranmanai 4 box office collections: Tamannah, Sundar C starrer Tops 100 Crore Worldwide" இம் மூலத்தில் இருந்து 10 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240610075608/https://www.pinkvilla.com/entertainment/box-office/aranmanai-4-box-office-collections-tamannah-sundar-c-starrer-tops-100-crore-worldwide-1314948. 
  5. "Aranmanai 4 Twitter reviews: Tamannaah Bhatia, Raashii Khanna's horror film is 'entertaining but outdated,' say fans". 3 May 2024 இம் மூலத்தில் இருந்து 3 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240503130732/https://www.hindustantimes.com/entertainment/tamil-cinema/aranmanai-4-twitter-reviews-tamannaah-bhatia-raashi-khanna-horror-film-entertaining-but-outdated-say-fans-101714736949624.html. 
"https://tamilar.wiki/index.php?title=அரண்மனை_4&oldid=30163" இருந்து மீள்விக்கப்பட்டது