அரணம்
அரணம் (Aranam) என்பது 2024-இல் பிரியன் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் குற்றத் திரைப்படமாகும். இப்படத்தில் பிரியன், வர்ஷா சரவணகுமார், இலகுபரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தமிழ் திரைக்கூடம் என்ற பதாகையின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது.[1] இத்திரைப்படம் 2024 சனவரி 5 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- கதிராக பிரியன் [2]
- தில்லை நாயகியாக வர்ஷா சரவணகுமார்
- சக்தியாக இலகுபரன்
- கயலாக கீர்த்தினா கண்ணதாசன்
தயாரிப்பு
ஒளிப்பதிவை நிதின் கே. ராஜ், நௌசாத் ஆகியோர் மேற்கொண்டனர். படத்தொகுப்பை பி.கே மேற்கொண்டார்.[3] படத்தின் முதற் பார்வை 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. படத்தின் இசை வெளியீடு சென்னையில் 2023 திசம்பர் 18 அன்று நடைபெற்றது.[4][5][6]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சாஜன் மாதவ் இசையமைத்திருந்தார். [7]
- காத்துல என்ன-ஹரிஹரசுதன், நமிதா பாபு
- நளினா நளினா-மது பாலகிருஷ்ணன், மஞ்சரி
- ஆரிராரரோ-ஹரிஹரசுதன்
- கண்ணாடி கண்ணுலா-சாஜன் மாதவ், வைஷ்ணவி கண்ணன்
வரவேற்பு
டைம்ஸ் நவ் விமர்சகர் ஒருவர் இப்படத்தை 5இற்கு 3 என மதிப்பிட்டு" பரபரப்பூட்டும் உலகில் எதிர்பாராத பயணத்தை விரும்புவோருக்கு, அரணம் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்" என்று எழுதினார்.[8][9]
மேற்கோள்கள்
- ↑ "Aranam". The Times of India. 2023-11-21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257 இம் மூலத்தில் இருந்து 2023-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231204131106/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/aranam/articleshow/105394418.cms?from=mdr.
- ↑ தாரா, ராகேஷ் (2023-12-19). "முத்து, ஆளவந்தான்னு டிவில 100 தரம் போட்ட படத்த ரீரிலிஸ் பண்றாங்க.. எனக்கு தியேட்டர் கிடைக்கல." tamil.abplive.com. Archived from the original on 2023-12-19. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
- ↑ "கிரைம், திரில்லராக உருவான அரணம்!". Hindu Tamil Thisai. 2023-04-06. Archived from the original on 2023-05-15. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
- ↑ "பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் 'அரணம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு". Virakesari.lk (in English). Archived from the original on 2023-04-06. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
- ↑ "கிரைம், திரில்லராக உருவான "அரணம்" திரைப்படதின் இசை வெளியீட்டு விழா". Zee Hindustan Tamil. 2023-12-19. Archived from the original on 2023-12-22. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
- ↑ "."அரணம்" திரைப்படதின் இசை வெளியீடு". தின பூமி. Archived from the original on 2023-12-30. பார்க்கப்பட்ட நாள் 2024-01-05.
- ↑ "Aranam (Original Motion Picture Soundtrack) Songs: Aranam (Original Motion Picture Soundtrack) MP3 Tamil Songs by Saajan Madhav Online Free on Gaana.com" – via gaana.com.
- ↑ "Aranam Movie Review: Piriyan's Horror Thriller Captivates Audience With Eerie, Unpredictable Narrative". TimesNow (in English). 2024-01-05. Archived from the original on 2024-01-05. பார்க்கப்பட்ட நாள் 2024-01-08.
- ↑ "Dina hosted at ImgBB". ImgBB (in English). Archived from the original on 2024-01-26. பார்க்கப்பட்ட நாள் 2024-01-08.