அய் ஜிங்
அய் ஜிங் (艾青, 1910 -1996) சீன இலக்கியவாதி ஆவார். இவர், சீனாவிலுள்ள ஜியாங் ஹைச்செங்கில், நிலக்கிழார் குடும்பமொன்றில் 1910ஆம் ஆண்டு பிறந்தார். இவரால், பெற்றோருக்குத் தீங்கு விளையுமென ஒரு சோதிடன் கூறியதால், வளர்க்கப்படுவதற்காகத் தொலைவிலுள்ள உழவர் குடும்பப் பெண்ணொருத்தியிடம் சேர்க்கப்பட்டார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அய் ஜிங் |
---|---|
பிறந்ததிகதி | 27 மார்ச்சு 1910 ஜின்ஹுவா |
இறப்பு | 5 மே 1996 (அகவை 86) |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | Chevalier des Arts et des Lettres |
1929 இல் ஓவியம் கற்கப் பிரான்ஸ் சென்று சீனா திரும்பிய பின், 1932 இல் நாட்டுப்பற்று நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1936 இல் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தயானெ என்ற முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டார்.
1957-58களில் வலதுசாரிகளுக்கெதிரான இயக்கத்தின்போது "வலதுசாரி"யென முத்திரை குத்தப்பட்டு, இவரும் இவரது கவிதைகளும் பொதுவாழ்விலிருந்து ஒதுக்கப்பட்டன. 1978 இல் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவராய் மீண்டும் பொதுவாழ்விலும் இலக்கியத் துறையிலும் தோன்றினார்; சீன எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவருமானார்.
வெளி இணைப்புகள்
- Columbia Encyclopedia பரணிடப்பட்டது 2005-04-22 at the வந்தவழி இயந்திரம்
- Obituary (in French)
- asiaweek.com Obituary
- chineseliterature.com பரணிடப்பட்டது 2005-04-26 at the வந்தவழி இயந்திரம்