அயோத்தியா (2005 திரைப்படம்)

அயோத்தியா (Ayodhya) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். ஆர். ஜெயபிரகாஷ் எழுதி இயக்கி, தயாரித்த இப்பபடத்தில் புதுமுகம் மோகன்குமார், ரமணா, ரேகா உன்னிகிருஷ்ணன், புதுமுகம் ராகினி நட்வானி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மணிவண்ணன், ஜே. லிவிங்ஸ்டன், சரண்ராஜ், இளவரசு, சீதா, சரண்யா பொன்வண்ணன், மயில்சாமி, சிட்டி பாபு, டெல்லி குமார் ஆகியோர் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சபேஷ் முரளி இசை அமைத்துள்ளனர். படமானது 28. சனவரி 2005 அன்று வெளியானது.[1]

அயோத்தியா
இயக்கம்ஆர். ஜெயபிரகாஷ்
தயாரிப்புஆர். ஜெயபிரகாஷ்
கதைஆர். ஜெயபிரகாஷ்
இசைசபேஷ் முரளி
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். செல்வா
படத்தொகுப்புஎம். பி. இரவிச்சந்திரன்
கலையகம்ஜெயவிலாஸ் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 28, 2005 (2005-01-28)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

இயக்குனர் ஆர். ஜெயபிரகாஷ் விளக்கும்போது, "படத்தின் பெயரானது கதையில் நடக்கும் சிக்கலைக் குறிக்கிறது. கிராமத்தில் வசிப்பவர்களுக்குள் கோயில் குறித்து எந்தவித சர்ச்சையும் இல்லை. வெளியாட்களால் மட்டுமே தொல்லை. இந்த ஊரில் அமைதியின்மையானது வெளி நபர்களாலே ஏற்படுகிறது. கிராமத்திலிருக்கும் இரண்டு காதல் பறவைகளுக்கும் இதே நிலைதான் ". புதுமுகம் மோகன்குமார், ரமணா, ரேகா உன்னிகிருஷ்ணன், புதுமுகம் ராகினி நட்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். சபேஷ் முரளி இப்படத்திற்கு இசை அமைத்திருந்தனர். இரண்டு பாடல்கள் அயர்லாந்தில் படமாக்கப்பட்டன.[2][3]

இசை

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் சபேஷ் முரளி அமைத்தனர். 3 திசம்பர் 2004 இல் வெளியிடப்பட்ட இசைப்பதிவில், நா. முத்துக்குமார், பா. விஜய், கலைகுமார் ஆகியோர் எழுதிய ஆறு பாடல்கள் இருந்தன.[4]

எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 "சிவகாசி தீ விழிகள்" சீனிவாஸ் 6:01
2 "ஆரஞ்சு" சுஜாதா மோகன் 6:01
3 "மார்கழி மாச" ரஞ்சித், ஸ்வப்னா மாதுரி 5:40
4 "கிச்சிலி கிச்சிலிக்கா" கார்த்திக் 5:02
5 "பகவானே என் கதால்" சபேஷ், சின்மயி 5:11
6 "ஆயிரம் மீனா என் நெஞ்சில்" ஹரிஷ் ராகவேந்திரா 5:41

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அயோத்தியா_(2005_திரைப்படம்)&oldid=30133" இருந்து மீள்விக்கப்பட்டது