அம்பு (சிற்றிதழ்)

அம்பு இலங்கை, கிழக்கு மாகாணம் கல்முனையிலிருந்து 1973இல் வெளிவந்த மாதாந்த இதழாகும்.

பணிக்கூற்று

  • அறிவியல் திங்கள் ஏடு

நிர்வாக ஆசிரியர்

  • ஏ. எம். அப்துல் பசீர்

பதிப்பாசிரியர்

  • சின்னையா கதிர்காமநாதன்

முகவரி

நிர்வாக ஆசிரியர், அம்பு, சாஹிராக் கல்லூரி, கல்முனை.

விளம்பரம்

அம்பு சிற்றிதழ் குறித்த விளம்பரம் பின்வருமாறு அமைந்திருந்தது.

இலக்கை நோக்கி எறிவது 'அம்பு'.
இன்றைய தலைமுறையினரின் இனிய விருப்பம் 'அம்பு'.
வேகம், வீழ்சு, ஆழம் கொண்டது 'அம்பு'.
ஈழத்தின் மாத இதழ் 'அம்பு'.

உள்ளடக்கம்

இவ்விதழில் பல்வேறுபட்ட அறிவியல் சார்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் இடம்பெற்ற துணுக்குகள் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளாக இருந்தது. இவ்விதழ் 48 பக்கங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது.

"https://tamilar.wiki/index.php?title=அம்பு_(சிற்றிதழ்)&oldid=14797" இருந்து மீள்விக்கப்பட்டது