அம்பிகை மாலை

அம்பிகை மாலை என்பது அம்மை வழிபாட்டு நூல். அம்மையைப் பிற்காலத்தில் அம்பிகை என வழங்கலாயினர். அம்பு என்னும் சொல் நீரைக் குறிக்கும். இதனை அப்பு என்றும் வழங்குவர். சிவன் தீ வடிவினன். அவனோடு இணைந்துள்ளவள் நீர் வடிவினள். இவளைச் சத்தி, சக்தி, பார்வதி, உமை, உமாதேவி, அம்மை என்றெல்லாம் வழங்குவர். சத்தியை வழிபடுவது ‘சாத்தம்’ (சாத்த மார்க்கம், சாக்த மார்க்கம்)

அம்மையைப் போற்றும் அம்பிகை மாலை நூல்கள்

மதுராபுரி அம்பிகை மாலை 30 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் வரகுணராம குலசேகரன் பாடியது 16ஆம் நூற்றாண்டு
அபிராமி அந்தாதி 100 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் அபிராமிப்பட்டர் பாடியது 18ஆம் நூற்றாண்டு

குலசேகரனும் பட்டரும்

மதுராபுரி அம்பிகை மாலை நூலிலுள்ள சொற்றொடர்களில் தோய்ந்து அபிராமிப் பட்டர் தன் நூலை உருவாக்கியுள்ளார்.

குலசேகரன் அபிராமி பட்டர்
இணங்கேன் ஒருவரை, நின்னிரு தாளன்றி எப்பொழுதும், - வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் வஞ்ச நெஞ்சுடன் பிணங்கேன் வணங்கேன், ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில் வஞ்சகரோடு, - இணங்கேன், எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரொடும் - பிணங்கேன்,
கரும்பும் கண்ணைந்தும் பாசாங்கு சமுங்கை கொண்டு அடியேன் - திரும்பும் திசைதொறும் தோற்று கண்டாய் (3) பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு - ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் - தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் (85)
நுங்கேள்வர் பாகத்தும் அந் நான்மறை எனும் நூலிடத்தும் - கொங்கேய் பொகுட்டுக் கமலாலயத்தும் குடிகொண்ட நீ (18) நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ அறைகின்ற நான்மறையின் அடியோ ... கஞ்சமோ (20)
சடாடவியார் உண்ட காள விடத்தை அமுதாக்கும் சாவானந்தமே மதுராபுரி அம்பிகையே (26) வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை (5)
உன்னடிக்கே - பொழியாப் புதுமலர் இட்டு நிற்பார்க்கு அழியாப் பதம் தருவாய் (23) புதுமலர் இட்டு நின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் பரவும் பதம் (83)

இப்படிப் பல.

"https://tamilar.wiki/index.php?title=அம்பிகை_மாலை&oldid=17112" இருந்து மீள்விக்கப்பட்டது