அம்பல் பிரமபுரீசுவரர் கோயில்
அம்பல் பிரம்மபுரீசுவரர் கோயில் (அம்பர் பெருந் திருக்கோயில்) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 54ஆவது சிவத்தலமாகும். சோமாசிமாற நாயனார் வசித்த தலம் எனப்படுகிறது.
தேவாரம் பாடல் பெற்ற அம்பர் பெருந்திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°55′01″N 79°40′59″E / 10.9170°N 79.6831°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | அம்பர் பெருந் திருக்கோயில் |
பெயர்: | அம்பர் பெருந்திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | அம்பல் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பிரமபுரீசுவரர் |
தாயார்: | சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை |
தல விருட்சம்: | புன்னை மரம் |
தீர்த்தம்: | பிரம தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கோச்செங்கட்சோழன் திருப்பணியில் மாடக்கோயில் |
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது.
அமைப்பு
இது ஒரு மாடக்கோயிலாகும். இக்கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. அடுத்து சுதையால் ஆன பெரிய நந்தி உள்ளது. திருச்சுற்றில் படிக்காசு விநாயகர், சோமாசிமாறர், சுசீலா அம்பாள், நடராஜர், நவக்கிரகம், நந்தி, விநாயகர், பாலசுப்ரமணியம், கோச்செங்கட்சோழர், சம்பந்தர், அப்பர், பிரம்மா, சரஸ்வதி அம்மன், சனி, முருகன், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறத்தில் சுகந்த குந்தளாம்பிகை எனப்படும் பூங்குழலி அம்மன் சன்னதி உள்ளது. தரை தளத்தில் திருச்சுற்றில் ஸ்தல விநாயகர், சுப்ரமணியர், ஐயப்பன், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. அடுத்து ஜம்புகேஸ்வரர் சன்னதி உள்ளது. அதற்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. வலம் முடித்து, படிகளேறி மேலே சென்றால் மாடக்கோயிலாக அமைந்துள்ள இக்கோயிலின் உயர்ந்த தளத்தில் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் பிரமபுரீசுவரர்,இறைவி சுகந்த குந்தளாம்பிகை.
வழிபட்டோர்
இத்தலத்தில் பிரமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.