அப்துல்ரசாக் குர்னா

அப்துல்ரசாக் குர்னா (Abdulrazak Gurnah; பிறப்பு: 20 திசம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவர் 1960களில் சான்சிபார் நாட்டில் இருந்து சான்சிபார் புரட்சியின் போது வெளியேறி அகதியாக ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார்.[1] இவர் 1994 இல் எழுதிய சொர்க்கம் என்ற புதினம் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2][3][4][5]

அப்துல்ரசாக் குர்னா
AbulrazakGurnahHebronPanel (cropped).jpg
இயற்பெயர் அப்துல்ரசாக் குர்னா
Abdulrazak Gurnah
கல்வி கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கெண்ட் பல்கலைக்கழகம் (முதுநிலை, முனைவர்)
வகை புதினம்
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2021)

வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்ரசாக் குர்னா 1948 திசம்பர் 20 இல்[6] இன்றைய தான்சானியாவில் உள்ள சான்சிபார் சுல்தானகத்தில் பிறந்தார்.[7] சான்சிபார் புரட்சியின் போது அரபு மக்களுக்கெதிரான துன்புறுத்தலை அடுத்து, இவர் தனது 18-வது அகவையில் நாட்டை விட்டு வெளியேறினார்.[8][9] 1968 இல் இவர் ஏதிலியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.[10][11]

இங்கிலாந்து கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் கல்வி கற்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்..[12] பின்னர் கெண்ட் பல்கலைக்கழகத்தில் 1982 இல் மேற்கு ஆப்பிரிக்கப் புதினங்களின் விமர்சனத்தின் அளவுகோல் என்பதில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[7][13] 1980 முதல் 1983 வரை நைஜீரியாவில் உள்ள பயேரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இளைப்பாறும் வரை கெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[8]

விருதுகளும் சிறப்புகளும்

கருப்பொருள்

குர்னாவின் பெரும்பாலான படைப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.[15] இவரது புதினங்களில் ஒருவரைத் தவிர கதாநாயகர்கள் அனைவரும் சான்சிபாரில் பிறந்தவர்கள்.[16] குர்னாவின் புதினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க கதாநாயகர்களை அவர்களின் பரந்த சர்வதேச சூழலில் வைக்கின்றன என்று இலக்கிய விமர்சகர் புரூஸ் கிங் வாதிடுகிறார்.[17] எழுத்தாளர் ஐ. சாந்தன் தனது 'உள்ளங்கையில் உலக இலக்கியம்' (2010) என்ற நூலில் "குர்ணாவின் 'அமைதியை நாடுதல்' என்ற புதினம் இடப்பெயர்வு, பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றைப் பேசுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

  1. BBC (October 7, 2021) Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner. Retrieved October 7, 2021.
  2. 2.0 2.1 "The Nobel Prize in Literature 2021". 7 October 2021 இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007151626/https://www.nobelprize.org/prizes/literature/2021/summary/. 
  3. 3.0 3.1 Flood, Alison (7 October 2021). "Abdulrazak Gurnah wins the 2021 Nobel prize in literature". The Guardian இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007122935/https://www.theguardian.com/books/2021/oct/07/abdulrazak-gurnah-wins-the-2021-nobel-prize-in-literature. 
  4. 4.0 4.1 "Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner". BBC News. 7 October 2021 இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007151627/https://www.bbc.co.uk/news/entertainment-arts-58828947. 
  5. "இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா". https://www.hindutamil.in/news/world/724048-tanzanian-born-novelist-abdulrazak-gurnah-gets-nobel-prize-in-literature.html. பார்த்த நாள்: 8 October 2021. 
  6. Loimeier, Manfred (2016-08-30). "Gurnah, Abdulrazak". in Ruckaberle, Axel (in de). Metzler Lexikon Weltliteratur: Band 2: G–M. Springer. பக். 82–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-476-00129-0. https://books.google.com/books?id=G0vvDAAAQBAJ. பார்த்த நாள்: 7 October 2021. 
  7. 7.0 7.1 King, Bruce (2004). Bate, Jonathan. ed. The Oxford English Literary History. 13. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-957538-1. இணையக் கணினி நூலக மையம்:49564874. https://archive.org/details/oxfordenglishlit0013unse. 
  8. 8.0 8.1 Flood, Alison (2021-10-07). "Abdulrazak Gurnah wins the 2021 Nobel prize in literature" (in en). தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007122935/https://www.theguardian.com/books/2021/oct/07/abdulrazak-gurnah-wins-the-2021-nobel-prize-in-literature. 
  9. "Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner" (in en-GB). BBC News. 2021-10-07. https://www.bbc.com/news/entertainment-arts-58828947. 
  10. BBC (October 7, 2021) Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner Retrieved 7 October, 2021
  11. Prono, Luca (2005). "Abdulrazak Gurnah - Literature". British Council இம் மூலத்தில் இருந்து 3 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190803094503/https://literature.britishcouncil.org/writer/abdulrazak-gurnah. 
  12. Hand, Felicity. "Abdulrazak Gurnah (1948–)". The Literary Encyclopedia இம் மூலத்தில் இருந்து 2018-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180619181555/http://grupsderecerca.uab.cat/ratnakara/sites/grupsderecerca.uab.cat.ratnakara/files/Literary_encyclopedia_people_11741.pdf. பார்த்த நாள்: 2021-10-07. 
  13. Annual Bibliography of English Language and Literature for 1986. 61. Maney Publishing. 1989. பக். 588. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-947623-30-2. 
  14. "Abdulrazak Gurnah" (in en-GB). Royal Society of Literature இம் மூலத்தில் இருந்து 10 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201010131256/https://rsliterature.org/fellow/abdulrazak-gurnah-3/. 
  15. Lavery 2013, ப. 118.
  16. Bosman, Sean James (2021-08-26). "Abdulrazak Gurnah". Rejection of Victimhood in Literature by Abdulrazak Gurnah, Viet Thanh Nguyen, and Luis Alberto Urrea. Brill Publishers. doi:10.1163/9789004469006_003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-46900-6. 
  17. King 2006, ப. 86.

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:2021 Nobel Prize winners

"https://tamilar.wiki/index.php?title=அப்துல்ரசாக்_குர்னா&oldid=19422" இருந்து மீள்விக்கப்பட்டது