அபி (கவிஞர்)

அபி என்ற பீ. மு. அபிபுல்லா (பிறப்பு: 1942) என்பவர் தமிழ்க் கவிஞர் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருதினைப் பெறுகிறார்.[2] தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார்.[3] இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.[1]

இயற்பெயர்/
அறியும் பெயர்
அபி
பிறந்ததிகதி 1942
பிறந்தஇடம் போடிநாயக்கனூர், தேனி தமிழ்நாடு, இந்தியா
பணி பேராசிரியர், கவிஞர்
தேசியம் இந்தியர்
பணியகம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரி
பிள்ளைகள் அஷ்ரப் அலி,
ரியாஸ் அகமது,
பர்வின் பாத்திமா[1]
இணையதளம் http://abikavithaiulagam.blogspot.com

வாழ்க்கை

இவர் 1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் பிறந்தார். லா.ச.ராவின் நாவல் உத்திகளை ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.[4] மேலூர் அரசுக் கலைக்கல்லூரில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவரது நூல்கள்

  1. மெளனத்தின் நாவுகள் (1974) - கவிஞர் மீரா அவர்களால் அன்னம் பதிப்பகம்[5]
  2. அந்தர நடை (1978)
  3. என்ற ஒன்று (1987)
  4. அபி கவிதைகள் (2013) - கலைஞன் பதிப்பகம்

விருதுகள்

  • 2004: கவிக்கோ விருது
  • 2004: கவிக்கணம் விருது
  • 2008: கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது[1]
  • 2011: சிற்பி இலக்கிய விருது[6]
  • 2019: விஷ்ணுபுரம் விருது[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அபி_(கவிஞர்)&oldid=15779" இருந்து மீள்விக்கப்பட்டது