அபிராமி (திரைப்படம்)
அபிராமி 1992 ஆம் ஆண்டு சரவணன், சுஜாதா மற்றும் கஸ்தூரி நடிப்பில் ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். திலிப் குமார் இயக்குனராக அறிமுகமானார். இசையமைப்பாளராக மனோரஞ்சன் அறிமுகமானார்.[1]
அபிராமி | |
---|---|
இயக்கம் | திலிப் குமார் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | திலிப் குமார் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. ராம்சிங் |
படத்தொகுப்பு | பி. பாஸ்கரன் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | நவம்பர் 27, 1992 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
அபிராமியின் (சுஜாதா) ஐந்து மகள்கள் தனம் (கஸ்தூரி), ராஜேஸ்வரி (அஞ்சு), மகேஸ்வரி (வினோதினி) மற்றும் இரு சிறுமிகள். பிறரிடம் அன்பாகப் பேசும் இயல்புடைய தனம் தட்டச்சராக வேலை பார்க்கிறாள்.
வேலை தேடும் இளைஞனான சரவணன் (சரவணன்) ஓர் அனாதை. தனத்தை சரவணன் ஒரு தலையாகக் காதலிக்கிறான். அவனது நண்பன் ராம்காந்துடன் (செந்தில்) ஒரு விடுதியில் தங்கியுள்ளான். ஒரு துணிக்கடையில் சரவணனுக்கு வேலை கிடைக்கிறது. தனம் வீட்டின் அருகிலுள்ள வீட்டிற்கு தன் நண்பனுடன் வாடகைக்குக் குடியேறுகிறான். அபிராமி குடும்பத்தோடு நெருங்கிப் பழகுவதால் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே சரவணனை நினைக்கிறார்கள்.
தனத்திற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படுவதை அறியும் சரவணன் மனமுடைந்து, தன் காதலை தனத்திடம் சொல்லாமலே வேறு வீட்டிற்கு மாறுகிறான். தனத்தின் திருமண நாளன்று விபத்தில் சிக்கும் அபிராமியிடமிருந்த திருமணத்திற்குத் தேவையான நகைகள் திருடு போகின்றன. அபிராமியை மருத்துவமனையில் சேர்க்கும் சரவணன், கைம்பெண்ணான அவனது முதலாளியின் மகள் வசந்தியிடமிருந்து (ரோகிணி) நகைகளைப் பெற்றுத் தனத்தின் திருமணத்தை நடத்தி முடிக்கிறான். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அபிராமி இறந்த உண்மையைக் கூறினால் திருமணம் நின்றுபோகும் என்று அதுவரை மறைத்திருந்த செய்தியைக் கூறுகிறான். அனைவரும் அதிர்ச்சியடைந்து அழுகின்றனர்.
ஆதரவற்ற தனத்தின் நான்கு தங்கைகளுக்கு சகோதரனாக இருந்து அவர்களுக்குத் திருமணத்தை நடத்திவைக்கவும், வசந்தியைத் திருமணம் செய்யவும் முடிவெடுக்கிறான் சரவணன்.
நடிகர்கள்
- சரவணன் - சரவணன்
- சுஜாதா - அபிராமி
- கஸ்தூரி - தனம்
- அஞ்சு - ராஜேஸ்வரி
- வினோதினி - மகேஸ்வரி
- ரோகிணி - வசந்தி
- கவுண்டமணி - சிங்காரம்
- செந்தில் - ராம்காந்த்
- வடிவுக்கரசி - லட்சுமி
- சி. ஆர். சரஸ்வதி
- விஜய சந்திரிகா
- சண்முகசுந்தரி
- இந்திரா தேவி
- ரா. சங்கரன்
- குமரிமுத்து - நடத்துனர்
- லூசு மோகன்
- ராஜவேலு
- எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- சித்ரகுப்தன்
- பயில்வான் ரங்கநாதன் - பொன்னுசாமி
- சுவாமிநாதன்
- ஓமக்குச்சி நரசிம்மன் - ஆரோக்யம்
- பசி நாராயணன்
- தயிர்வடை தேசிகன்
- கருப்பு சுப்பையா
- மார்த்தாண்டன்
- கோட்டை பெருமாள்
- பேபி பானு
- பேபி பவானி
- நளினிகாந்த்
- வி. கோபாலகிருஷ்ணன்
- கனல் கண்ணன்
- நெப்போலியன் - சிறப்புத் தோற்றம்
- சிவா - சிறப்புத் தோற்றம்
- ரமேஷ் கண்ணா - சிறப்புத் தோற்றம்
- திலிப் குமார் (இயக்குனர்) - சிறப்புத் தோற்றம்
இசை
படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வைரமுத்து, காளிதாசன் மற்றும் திலீப் குமார் (இயக்குனர்).
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | காலநீளம் |
---|---|---|---|
1 | ஆத்தாடி சின்னப்பொண்ணு | மின்மினி மற்றும் குழுவினர் | 4:12 |
2 | அவசரமா ரொம்ப | எஸ். பி. சைலஜா மற்றும் குழுவினர் | 4:18 |
3 | ஏழை வீட்டில் (பெண் குரல்) | வாணி ஜெயராம் | 4:24 |
4 | ஏழை வீட்டில் (ஆண் குரல்) | மனோ | 0:47 |
5 | கலைகளின் தாயே | மலேசியா வாசுதேவன், சக்தி சண்முகம், சித்ரா | 4:50 |
6 | கன்னித் தமிழோ கம்பன் கவியோ | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:33 |
7 | நாம் இருக்கோம் | எஸ். பி. சைலஜா மற்றும் குழுவினர் | 2:42 |