அபிநயசிறீ
அபிநயஸ்ரீ (Abhinayashree) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தென்னிந்திய மொழி படங்களில் துணை வேடங்களில் தோன்றியுள்ளார்.
அபிநயசிறீ | |
---|---|
பிறப்பு | Abhinayashree 25 மார்ச்சு 1988 இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
பணி | நடிகை, நடன அமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2001-2017 |
பெற்றோர் | சதீஷ் குமார், அனுராதா |
தொழில்
இவரது முதல் பெரிய பாத்திரம் சித்திக்கின் 2001 தமிழ் நகைச்சுவை படமான பிரண்ட்ஸ் படத்தில் வந்தது. அதில் விஜய் மற்றும் சூரியாவுடன் நடித்தார். 2004 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஆர்யாவில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து "ஆ அண்டே அமலாபுரம்" பாடலுக்கு ஆடியபிறகு இவர் தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைப் பெற்றார். இந்த வெற்றி இந்த நடிகைக்கு இதே போன்ற பல வாய்ப்புகளைப் பெற வழிவகுத்தது.[1] 2005 ஆம் ஆண்டு தெலுங்கு நகைச்சுவை படமான ஹங்காமாவில் அலி மற்றும் வேணு மாதவ் ஆகியோருடன் இவர் நடித்தார். இயக்குனர் கிருஷ்ணா ரெட்டி இந்த பாத்திரத்தை இவருக்கு விளக்கியப் பின்னர் முப்பது நாட்கள் படப்பிடிப்புக்கு ஒப்புதல் தந்து கையெழுத்திட்டார். இவர் பைசலோ பரமாத்மா என்ற படத்தில் நடித்ததற்காக ஆந்திர அரசின் சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருதை வென்றார்.
2007 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஆதிவரம் ஆடவல்லக்கு செலவு படத்தில் முழு அளவிலான துணை பாத்திரத்தில் தோன்றியபின், அபிநயஸ்ரீ இனி படங்களில் கவர்ச்சி ஆட்டங்களில் ஆடுவதில்லை என முடிவெடுத்தார். ஆனால் முமைத் கான் போன்றவர்கள் இருவகையிலும் படங்களில் வெற்றிகரமாக தோன்றுவதைக் கண்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார்.[2]
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்ததிரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2001 | பிரண்ட்ஸ் | அபிராமி | தமிழ் | |
சினேகமண்டே இதேரா | சுவாதி | தெலுங்கு | ||
2002 | சப்தம் | தமிழ் | ||
ஒன் டூ திரீ | ஜோதி | தமிழ் | மும்மொழிப் படம், தமிழ்/ கன்னடம் / தெலுங்கு | |
மாறன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
காரியா | மாயா | கன்னடம் | ||
தாண்டவம் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | ||
பிராணயமணிதூவல் | மலையாளம் | |||
2003 | ராமச்சந்திரா | சந்தியா | தமிழ் | |
அன்பு | ரசிகா | தமிழ் | ||
பந்தா பரமசிவம் | அஞ்சு | தமிழ் | ||
ஆஹா எத்தனை அழகு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
இயற்கை | தமிழ் | |||
தத்தி தாவுது மனசு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
2004 | ஆர்யா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | |
என் புருசன் எதிர்வீட்டுப் பொண்ணு | மீனாட்சி | தமிழ் | ||
சூப்பர் டா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
வயசு பசங்க | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
ஸ்வேதா நாகு | வாசுகி | தெலுங்கு | ||
ஆப்தமுடு | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
ஜெய் | தெலுங்கு | |||
2005 | அயோத்தியா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
ஜதி | பிரியா | தமிழ் | ||
உணர்ச்சிகள் | கவிதா | தமிழ் | ||
ஹங்காமா | திவ்யா | தெலுங்கு | ||
நாய்டு எல்எல்பி | தெலுங்கு | |||
யுவகுலு | தெலுங்கு | |||
பிரேமிகுலு | தெலுங்கு | |||
எவாடி கோலா வாதிதி | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
பதவி படுத்தும் பாடு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
மந்திரன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
2006 | பாக்யலட்சுமி பம்பர் டிரா | பார்வதி கோதம் | தெலுங்கு | |
2007 | பைசாலோ பரமாத்மா | தெலுங்கு | சிறந்த பெண் நகைச்சுவை நடிகருக்கான நந்தி விருது | |
அதிலி சத்திபாபு எல்.கே.ஜி. | தெலுங்கு | |||
ஆட்டா | தெலுங்கு | |||
சேலஞ்ச் | அபிநயா | தெலுங்கு | ||
சந்தமாமா | சக்குபாய் | தெலுங்கு | ||
காராஜாஷ்ரி | தெலுங்கு | |||
நீ நான் நிலா | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
நான்மா | மலையாளம் | |||
பகலா பிரேமி | ஒடியா | சிறப்புத் தோற்றம் | ||
2008 | மூக்கேல் மதன காமராஜு | ஜுலி | தெலுங்கு | |
ல்லேபவ்வு | தெலுங்கு | |||
பத்து பத்து | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
2009 | ஒரு காதலன் ஒரு காதலி / நீக்கு நாக்கு | லட்சுமி | தமிழ்/தெலுங்கு | |
4 கபில்ஸ் | சரோஜா | தெலுங்கு | ||
நிர்ணயம் | தெலுங்கு | |||
ஏக் நிரஞ்சன் | குருவின் மனைவி | தெலுங்கு | ||
எங்க ராசி நல்ல ராசி | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
2010 | வ குவாட்டர் கட்டிங் | சிங்காரி சுந்தரம் | தமிழ் | |
பொள்ளாச்சி மாப்பிள்ளை | தமிழ் | சிறப்புத் தோற்றம் | ||
கிளாமர் | தெலுங்கு | |||
2011 | இராமன் நல்ல பிள்ளை | கோமதி | தமிழ் | |
கிரீடம் | சிறீவாணி | தெலுங்கு | ||
2012 | யு கொடத்தாரா? உலிக்கி படததாரா? | கொல்ல சாவித்ரி | தெலுங்கு | |
2014 | பாண்டவலு | தெலுங்கு | ||
2015 | பாலக்காட்டு மாதவன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2016 | இளமை ஊஞ்சல் | தமிழ் | ||
2017 | சௌந்தர்ய நிலையா | மயூரி | கன்னடம் |
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் / காட்சிகள் | பாத்திரம் | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2015-2016 | ஜூனியர் சூப்பர் டான்சர் | தொகுப்பாளர் | பாலிமர் தொலைக்காட்சி | |
2017-2018 | ஸ்டார் வார்ஸ் | பங்கேற்பாளர் | சன் தொலைக்காட்சி | |
2017-2018 | டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 | பங்கேற்பாளர் | ஜீ தமிழ் | |
2018-2019 | நெஞ்சம் மறப்பதில்லை | தானே | விஜய் தொலைக்காட்சி | சிறப்பு தோற்றம் |