அபர்ணா நாகேஷ்

அபர்ணா நாகேஷ் திரைப்பட நடன கலைஞர், நடன கலைஞர் மற்றும் நடன இயக்குனர்,. [1] நடிகர், தொழில் முனைவோர் என்று விறுவிறுப்பாக செயலாற்றுபவர் ஆவார்.. இவர் சென்னையில், முழுதும் பெண்களுக்கான, முதல் நடனக் குழுவான ஹை கிக்ஸ் (ஆங்கிலம்: High Kicks), [2] மற்றும் மெட்ராஸ் டான்ஸ் ஆர்ட்ஸ் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை

அபர்ணா டிசம்பர் 19 ஆம் தேதியன்று இந்து பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் சென்னை வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் பயின்றார். பின்னர் சென்னையில் உள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். அடுத்து, அபர்ணா, நியூயார்க்கில் உள்ள பிராட்வே டான்ஸ் சென்டரில் நடனம் மற்றும் குரல் நுட்பத்தில் உயர் மேற்படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் சிறப்புச் சான்றிதழுடன் பட்டம் பெற்றார். [3]

தொழில்

ஜாஸ் ஆங்கிலம்:,Jazz) பாலே (ஆங்கிலம்: Ballet), சமகால நடனம் (ஆங்கிலம்: Contemporary dance), லத்தீன் மற்றும் ஸ்ட்ரீட் (ஆங்கிலம்: Latin & Street) போன்ற பல்வேறு நடன பாணிகளில் அபர்ணா விரிவாகப் பயிற்சி பெற்றுள்ளார். அவர் "குளோபல் டான்ஸ் ஃப்யூஷன்" (ஆங்கிலம்: "Global Dance Fusion") என்ற தலைப்பில் சமகால நடன அரங்கில் பணிபுரிகிறார். [4] [5] [6]

வாஷிங்டன் டிசியில் உள்ள கென்னடி சென்டர் ஃபார் பெர்பார்மிங் ஆர்ட்ஸில் (ஆங்கிலம்: Kennedy Center for Performing Arts), முழு உதவித்தொகையுடன், கலாச்சார இணைப்பு திட்டத்தில் பங்கேற்கத் தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேரில் அபர்ணாவும் ஒருவர் ஆவார். [7]

2014 [8] ஆம் ஆண்டு கிளாஸ்கோ ஸ்காட்லாந்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (ஆங்கிலம்: Commonwealth Games in Glasgow Scotland) நடைபெற்ற சமயம், ஹை கிக்ஸ் என்னும் தனது அணியுடன் இணைந்து, காமன்வெல்த் இளைஞர் நடன விழாவில், அபர்ணா பங்கேற்றார்.பிரகிருதி முதன்மைநிலை சமகால நடனத்தில் (ஆங்கிலம்: Prakriti Excellence in Contemporary Dance Awards) சிறந்து விளங்கும் விருதுக்காக. 2016 [9] ஆம் ஆண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நடன இயக்குனர்களில் இவரும் ஒருவர் ஆவார். அவர் ஆட்டிச நோயுற்ற குழந்தைகளுக்கான (ஆங்கிலம்:Autistic Children) லோட்டஸ் ஃபவுண்டேஷன் பள்ளியில் (ஆங்கிலம்: Lotus Foundation School) இயக்க சிகிச்சையை (ஆங்கிலம்: movement therapy) கற்பிக்கிறார். [10]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

அபர்ணா TEDx சென்னை ஸ்டார் விருது (ஆங்கிலம்: TEDx Chennai Star Award), [11] நடனத்தில் சிறந்து விளங்கும் BREW விருது, [12] மற்றும் Ba'hai Rose of Ridvan விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். [13] [14] அபர்ணா 2013 ஆம் ஆண்டுக்கான TEDx ஹிந்துஸ்தான், TEDx IIT, [1] மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான TEDx சென்னை [2] ஆகிய நிகழ்வுகளில் பேசினார். [15] 2015 ஆம் ஆண்டு, AIESEC நடத்திய குளோபல் யூத் வாய்ஸ் நிகழ்விலும் (ஆங்கிலம்: Global Youth Voice event) இவர் பேசினார்.. மார்ச் 2016 [11] ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற Vital Voices Mentoring Walk மற்றும் "இந்திய இளைஞர் கூட்டுக்குழு - 2016" (ஆங்கிலம்: Indian Youth Conclave 2016) [16] ஆகியவற்றிலும் அவர் பேசினார். அபர்ணா சிறந்த பெண்ணிய கானோளிக்கான (ஆங்கிலம்: Best Feminist Video) ஆரஞ்சு மலர் விருது - 2020 (ஆங்கிலம்: Orange Flower Award 2020) விருதினை மகளிர் இணையத்தில் (ஆங்கிலம்: Women's Web) வென்றார். [17]

மேற்கோள்கள்

  1. "Lok Sabha election 2019: Women voters list their demands". femina.in (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  2. Madhukar, Zippora (24 May 2012). "There's a Brown Girl in the Ring, Tra La La La La". www.theweekendleader.com (in English). பார்க்கப்பட்ட நாள் 13 August 2019.
  3. "Indulge one-on-one: Dancer Aparnaa Nagesh chats with Italian Chef Mauro Ferrari about passions, disco in the 80s, and food". www.indulgexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  4. "TEDxChennai | TED". www.ted.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  5. "Live Chennai: British council 70 years Celebration - Musical Evenings (29th June),British council 70 years Celebration,Musical Evenings". www.livechennai.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  6. "British Council turns 70 on a new note | Chennai News". https://timesofindia.indiatimes.com/city/chennai/british-council-turns-70-on-a-new-note/articleshow/64797839.cms. 
  7. DISB (2013-01-05). "Brown Girl In The Ring · Dark Is Beautiful". Dark Is Beautiful (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  8. "These dancers want to make India proud". Rediff. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  9. "Prakriti Excellence in Contemporary Dance Awards (2016)". Prakriti Foundation (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  10. "Talent zone". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  11. 11.0 11.1 "Aparnaa Nagesh | Madras Dance Arts / High Kicks - WeAreTheCity India | Events, Network, Advice for Women in India" (in en-US). 2017-09-21. https://3.wearethecity.in/aparnaa-nagesh-madras-dance-arts-high-kicks/. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Brew Women Awards 2017". Cinemaplusnews (in English). 2017-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  13. Sreesri (2012-05-04). "Context: Rose of Ridwan". Context. பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  14. "Frankly Speaking - An evening of Immersive Theatre at Chetpet, Chennai". Events High (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "International Congress 2015 Discharge Report". Issuu (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-05-19.
  16. "Indian Youth Conclave". Archived from the original on 2019-05-25. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  17. "Women's Web". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
"https://tamilar.wiki/index.php?title=அபர்ணா_நாகேஷ்&oldid=27607" இருந்து மீள்விக்கப்பட்டது