அன்னூர் மன்னீசுவரர் கோயில்

அன்னூர் மன்னீஸ்வரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மன்னீஸ்வரசுவாமி கோவில்
நுழைவாயில்.
அருள்மிகு மன்னீஸ்வரசுவாமி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு மன்னீஸ்வரசுவாமி கோவில்
அருள்மிகு மன்னீஸ்வரசுவாமி கோவில்
தமிழ்நாட்டில் கோயில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°14′7.57″N 77°6′11.7″E / 11.2354361°N 77.103250°E / 11.2354361; 77.103250
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:ஓதிமலை சாலை, அன்னூர், அன்னூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அவினாசி
மக்களவைத் தொகுதி:நீலகிரி
கோயில் தகவல்
மூலவர்:மன்னீஸ்வரர்
தாயார்:அருந்தவச்செல்வி
சிறப்புத் திருவிழாக்கள்:தேர்த்திருவிழா 1 நாள், மஹாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினொன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

இக்கோயில் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

இறைவன், இறைவி

இக்கோயிலின் மூலவராக மன்னீசுவரர் உள்ளார். இவர் அன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். அன்னி என்ற வேடனுக்கு அருள் புரிந்ததால் அன்னீசுவரர் என்றும், பாவச் செயலைச் செய்த அவனை மன்னித்ததால் மன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி அருந்தவச்செல்வி ஆவார். வன்னி இக்கோயிலின் தல மரமாகும். கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது. மார்கழியில் பிரமோற்சவம், சித்திரைப் பிறப்பு, வைகாசி பூசை, மகாசிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. அமாவாசையில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.[2]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் மூலவர் மன்னீஸ்வரர் சுயம்புவாக, மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அருந்தவச்செல்வி தனி சன்னதியில் உள்ளார். விமானம் கைலாச விமானமாக உள்ளது. திருச்சுற்றில் பைரவர், குரு, நடராஜர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நீலகண்ட நாயனார் ஆகியோர் உள்ளனர். வன்னி மரத்தின் கீழுள்ள சர்ப்பராசர் சன்னதியில் ஏழு நாகங்கள் உள்ளன.[2] இங்குக் கோயில் கோசாலை, கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

மார்கழி மாதம் தேர்த்திருவிழா 1 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மஹாசிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் தேர்த்திருவிழா 1 நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. 2.0 2.1 அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.