அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில்
திருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும்.[1][2][3]
தேவாரம் பாடல் பெற்ற அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | கலிக்காமூர் |
பெயர்: | அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | அன்னப்பன்பேட்டை (வில்வவன நாதர்) |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சுந்தரேஸ்வரர் |
தாயார்: | அழகம்மை |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | சந்திர தீர்த்தம் |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | மாசி பவுர்ணமியில் தீர்த்தவாரி, சிவராத்திரி, நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம். |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | 1000-2000 வருடங்களுக்கு முன் |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. பராசர முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 8வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 8 வது தேவாரத்தலம் ஆகும்.
ஊர்ப் பெயர்க் காரணம்
"கலி" (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், "திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது.
தலச் சிறப்பு
இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ :ta:அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில்
- ↑ Sri Sundareswarar temple, தினமலர்
- ↑ Ayyar, P. V. Jagadisa (1993). South Indian Shrines: Illustrated (2nd ed.). New Delhi: Asian Educational Service. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0151-3.