அனகா அலங்காமொனி

அனகா அலங்காமொனி (Anaka Alankamony பிறப்பு: சூலை 10, 1994) என்பவர் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை ஆவார்.[1] 2010ஆம் ஆண்டில் சர்வதேச ஸ்குவாஷ் வீரர்களுக்கான தரவரிசையில் 59 ஆவது இடத்திற்கு முன்னேறினார். 2014 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதினைப் பெற்றார்.

கல்வி

இவர் சென்னையில் உள்ள சேக்ரட் ஹார்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் ஸ்ரீ சிவ சுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியிலும் கல்வி கற்றார். 2013 ஆம் ஆண்டில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு கனிணி மற்றும் பொருளியல் பிரிவில் கல்வி கற்றார். அதே சமயம் பெண்கள் ஸ்குவாஷ் பிரிவில் விளையாடினார்.

தொழில் வாழ்க்கை

தனது 15ஆம் வயதில் 15 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய போட்டியில் வெற்றி பெற்றார்.[2] 2009 ஆம் ஆண்டில் உலக சாதனை படைத்து குறைந்த வயதில் விஸ்பா வாகையாளரானார். இதற்கு முன்னதாக மலேசியாவைச் சேர்ந்த நிகோல் டேவிட் தனது 16ஆம் வயதில் வென்றதே சாதனையாக இருந்தது.[3] ஜோஷ்னா சின்னப்பா விஸ்பா பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆவார்.[4]

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=அனகா_அலங்காமொனி&oldid=25628" இருந்து மீள்விக்கப்பட்டது