அந்தியூர் வட்டம்
அந்தியூர் வட்டம் (Anthiyur taluk) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக அந்தியூர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் அம்மாபேட்டை, அந்தியூர், பர்கூர், அத்தாணி என நான்கு உள் வட்டங்களும், 34 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
தோற்றம்
2012 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதியன்று, பழைய பவானி வட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அந்தியூர் உள்வட்டம், அத்தாணி உள்வட்டம், அம்மாபேட்டை உள்வட்டம், பர்கூர் உள்வட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த கிராமங்களை இணைத்து அந்தியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டது.[3][4]