அத்வைதா

அத்வைதா என்ற திரைப் பெயரால் அறியப்பட்ட கிருத்தி ஷெட்டி என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார்.[1]

அத்வைதா
பிறப்புகிருத்தி ஷெட்டி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009–2015

தொழில்

இவரது பரதநாட்டிய நிகழ்ச்சிகளைக் கண்ட, நாடக இயக்குனர் ஜெய் தீர்த்தா, இவரின் திறமைகளை கவனித்தார். இதன்பிறகு அவர் சமஸ்தி சண்டே ஸ்கூல் ஆஃப் டிராமாவில் சேரும்படி இவரை அறிவுறுத்தினார். இதன் விளைவாக, இவர் நாடகத்தில் பட்டயப் படிப்பை மேற்கொண்டார். மேலும் 'பிரீத்தி' என்ற நாடகத்தில் நடித்தார். பின்னர் 'சதாரமே' என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதை கர்நாடம் முழுவதும் நிகழ்த்தினார். இயக்குனர் சுனில் குமார் தேசாயின் கன்னட படமான சரிகாமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை கிருத்தி பெற்றார். அதே சமயத்தில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த முரளியை அவர் சந்தித்தார். அவர் சுவாமி இயக்கிய சகாக்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பை வழங்கினார்.[2] பின்னர் சுசீந்திரனின் விமர்சன ரீதியான பாராட்டப்பட்ட அழகர்சாமியின் குதிரை (2011) படத்தில் இனிகோ பிரபாகரனுடன் இணைந்து நடித்தார். பின்னர் அடுத்த ஆண்டில் கொண்டான் கொடுத்தானில் நடித்தார்.

2013 ஆம் ஆண்டில், சினேகாவின் காதலர்கள் பட வெளியீடு நேரத்தில் அத்வைதா என்ற தனது திரைப் பெயரை மாற்றி தன் அசல் பெயரான கிரித்தி செட்டி என்ற பெயரையே இனி பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தார். அத்வைதா என்ற பெயர் எண் கணித சோதிட காரணங்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாக இவர் குறிப்பிட்டார், ஆனால் மக்கள் அந்தப் பெயரை உச்சரிக்கும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார்.[3] பாண்டிய நாடு படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தை ஏற்று, சுசீந்திரனுடன் மீண்டும் பணியாற்றினார். இவரது எதிர்கால படத் திட்டங்களாக பிரேம்ஜி அமரனின் மாங்கா , செல்வி, கதாநாயகி பாத்திரத்தை மையமாகக் கொண்ட சினேகாவின் காதலர்கள் ஆகியன உள்ளன.

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2009 சரிகம கன்னட படம்
2011 அழகர்சாமியின் குதிரை தேவி
2011 சகாக்கள் தேவசேனா
2012 கொண்டான் கொடுத்தான் செவ்வந்தி
2013 பாண்டிய நாடு அமுதா
2014 சினேகாவின் காதலர்கள் சினேகா
2015 மாங்கா ஜோசிதா

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அத்வைதா&oldid=22288" இருந்து மீள்விக்கப்பட்டது