அதோமுகம் (திரைப்படம்)

அதோமுகம் (Athomugam) 2024 இல் சுனில் தேவ் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நாடகம் தொடர்பான பரபரப்பூட்டும்[1] இத்திரைப்படத்தில் எஸ். பி. சித்தார்த், சைதன்யா பிரதாப், சரித்திரன், ஆனந்த் நாக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் ஒரே நேரத்தில் மலையாளத்திலும் படமாக்கப்பட்டது.[2] படத்தின் தமிழ்ப் பதிப்பு 2024 மார்ச்சு 1 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

அதோமுகம் (திரைப்படம்)
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சுனில் தேவ்
தயாரிப்புரீல் பெட்டி
கதைசுனில் தேவ்
இசைமணிகண்டன் முரளி
சரண் இராகவன்
நடிப்பு
  • எஸ். பி. சித்தார்த்
  • சைதன்யா பிரதாப்
  • ஆனந்த் நாக்
ஒளிப்பதிவுஅருண் விஜயகுமார்
படத்தொகுப்புநிசாத் யோசுப்
கலையகம்அசீப்சு பிலிம்சு
ஜெய்கோ & எம்ஜிசி
விநியோகம்டிரீம் வாரியர் பிக்சர்சு
வெளியீடு1 மார்ச்சு 2024 (2024-03-01)
ஓட்டம்128 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

வெளியீடு

அதோமுகம் 2024 மார்ச்சு 1 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[3]

வரவேற்பு

தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ரூபா இராதாகிருஷ்ணன் இத்திரைப்படத்திற்கு 5 இற்கு 2+12 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு, "ஒரு கதாபாத்திரம் மீண்டும் படத்தில் நுழையும்போது, அதிகரிக்கப்பட்ட பின்னணி இசையும், அந்த மனிதனைப் பார்த்த கதாநாயகனின் அதிர்ச்சியும் பார்வையாளர்களுக்கு மீண்டும் அந்த கதாபாத்திரத்தைப் பார்த்து அதிர்ச்சியடைவதற்கான ஒரு குறிப்பைக் கொடுக்கிறது. ஆனால் அந்நேரத்தில், அந்த கதாபாத்திரம் யார் என்பதைப் பதிவு செய்ய ஒரு விநாடி ஆகும் என்பதை நாங்கள் முற்றிலும் மறந்துவிட்டோம்". என்று எழுதினார்.

டைம்ஸ் நவ் மணிகண்டன் கே. ஆர். இத்திரைப்படத்திற்கு 5 இற்கு 3+12 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு, "மொத்தத்தில், அதோமுகம் ஒரு சுத்தமான, நேரத்திற்கும் பணத்திற்கும் மதிப்புள்ள ஒரு பரபரப்பூட்டும் திரைப்படம்" என்று கூறினார்.[4] சினிமா எக்ஸ்பிரசைச் சேர்ந்த ஸ்ரீஜித் முல்லப்பள்ளி கூறுகையில், "மனிதகுலம், அதன் தொழில்நுட்ப சார்பு பற்றி நிறைய சொல்லக்கூடிய அதிரடிகளில் அதோமுகம் ஒன்றாகும்.[5] என்று எழுதினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அதோமுகம்_(திரைப்படம்)&oldid=30022" இருந்து மீள்விக்கப்பட்டது