அதி வினோத குதிரைப் பந்தய லாவணி
அதி வினோத குதிரைப் பந்தய லாவணி 1893ஆம் ஆண்டு சிங்கப்பூரில் வெளியான ஒரு தமிழ் நூல். இதனை இயற்றியவர் நா. வ. இரங்கசாமிதாசன். குருங்குளம் கருப்பண்ண உபாத்தியாரின் மாணாக்கரான இரங்கசாமி தாசன் கும்பகோணத்திலுள்ள ஆதி கும்பேசுவரர் கோயில் பகுதியைச் சேர்ந்தவர். “சரபக்கொடி” என்ற அடைமொழியைப் பெற்றவர். அவரும் அவரது மனைவியும் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் வந்தடைந்து குதிரைப்பந்தயம் கண்டது பற்றி லாவணி முறையில் பாடப்பட்ட இந்நூலில், அக்கால சிங்கப்பூர், அவ்வூர் வாழ் தமிழர் பற்றியும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. சிங்கைநகர் சுப்பிரமணியருக்கு கடவுள் வாழ்த்துடன் தொடங்கும் இந்நூலின் லாவணிப் பகுதியில் மொத்தம் 21 பாடல்கள் உள்ளன.