அதிசய மனிதன்
அதிசய மனிதன் 1990 ஆம் ஆண்டு தக்காளி சி. சீனிவாசன் தயாரித்து மற்றும் வி. பிரபாகர் இயக்கிய ஒரு திகில் தமிழ்த் திரைப்படம். இது நாளை மனிதன் திரைப்படத்தின் தொடர்ச்சி.[1][2][3]
அதிசய மனிதன் | |
---|---|
இயக்கம் | வி. பிரபாகர் |
தயாரிப்பு | தக்காளி சி. சீனிவாசன் |
கதை | வி.பிரபாகர் |
இசை | ப்ரேமி-சீனி |
நடிப்பு | ஜெய்சங்கர் நிழல்கள் ரவி கௌதமி கோவை சரளா |
வெளியீடு | 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
கௌதமி மற்றும் அவரது நண்பர்கள் வனாந்திரத்திலுள்ள ஒரு பங்களாவுக்கு வந்து தங்குகின்றனர். விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அழிக்க இயலாத மனிதன், மிருக வெறியில் சாவில் இருந்து உயிருடன் வந்து நண்பர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்கிறான். மெதுவாக, பிசாசு போன்ற அந்த மனிதன் ஒவ்வொருவரையும் கொன்று அந்த பங்களா வரை வருவது திகில் எதிர்கொள்ளும் நொடிகள். பேய் மனிதன் வடிவத்தில் துரத்தும் அவனிடம் இருந்து பயந்த சுபாவம் உள்ள கௌதமி தப்பி வர சிறப்பு போலீஸ் அதிகாரியான நிழல்கள் ரவி பிரத்யேக லேசர் துப்பாக்கி மூலம் அந்த மனிதனை அழிக்கிறார்.
மேற்கோள்கள்
- ↑ "Velu Prabhakaran ties the knot with Shirley Das, his heroine from Kadhal Kadhai". Firstpost. 3 June 2017 இம் மூலத்தில் இருந்து 27 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211027082651/https://www.firstpost.com/entertainment/velu-prabhakaran-ties-the-knot-with-shirley-das-his-heroine-from-kadhal-kadhai-3512601.html.
- ↑ Dhusiya, Mithuraaj (2017). Indian Horror Cinema: (En)gendering the Monstrous. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-138-69318-0.[page needed]
- ↑ "Adhisaya Manithan (1990)" இம் மூலத்தில் இருந்து 28 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211028212028/https://screen4screen.com/movies/adhisaya-manithan.