அட்னன் சமி

அட்னன் சமி கான் (Adnan Sami Khan) (பிறப்பு 15 ஆகஸ்ட் 1971) ஓர் இந்திய பாடகரும், இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும், நடிகரும் மற்றும் பியானோ கலைஞரும் ஆவார். [2] [3] [4] இவர் இந்தி மற்றும் தெலுங்கு உட்பட இந்திய மற்றும் மேற்கத்திய இசையை நிகழ்த்துகிறார். இசையில் இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக இவருக்கு இந்தியாவின் நாங்காவது உயரிய விருதான பத்மசிறீ வழங்கப்பட்டது. இவர் "பியானோவில் சந்தூர் மற்றும் இந்திய பாரம்பரிய இசையை வாசித்த முதல் இசைக்கலைஞர்" என்று புகழப்படுகிறார். [5] அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கீபோர்டு இதழில் வெளியான ஒரு மதிப்பாய்வு இவரை உலகின் அதிவேகமான விசைப்பலகைக் கலைஞர் என்று விவரித்தது [6] மேலும் இவரை 'தொண்ணூறுகளின் விசைப்பலகை கண்டுபிடிப்பு' என்றும் அழைத்தது. [7]

அட்னன் சமி
Adnan Sami in 2016.jpg
2016இல் சமி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அட்னன் சமி கான்
பிறப்பு15 ஆகத்து 1971 (1971-08-15) (அகவை 53)
இலண்டன், இங்கிலாந்து[1]
பிறப்பிடம்இங்கிலாந்து
இசை வடிவங்கள்
பாரம்பரிய இசை, ஜாஸ், பாப் ராக்
தொழில்(கள்)
  • இசையமைப்பாளர்
  • பாடகர்
  • இசைத் தொகுப்பாளர்
  • பியானோ கலைஞர்
  • தொலைக்காட்சித் தொகுப்பாளர்
  • நடிகர்
இசைக்கருவி(கள்)
பியானோ, விசைப்பலகை, கித்தார், அக்கார்டியன், சாக்சபோன், வயலின், முரசு, பாங்கோசு,காங்கோசு, தபேலா, தோலக், ஆர்மோனியம், சந்தூர், சித்தார், சரோத்
இசைத்துறையில்1986–தற்போது வரை

ஐக்கிய இராச்சியத்தில் தனது கல்வியை முடித்த இவர் கனடாவில் தனது வாழ்க்கையை கழித்தார். [1] பஷ்தூன் வம்சாவளியைச் சேர்ந்தவரும் பாக்கித்தான் விமானப்படை வீரருமான அர்சத் சமி கான் என்பவருக்கும் சம்மு காசுமீரைச் சேர்ந்த நவ்ரீன் ஆகியோருக்குப் பிறந்தார். [6] [8] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரை "இசை சுல்தான்" என்று அழைத்தது. [8] [9] [10] [11] 2016ல் இந்தியக் குடிமகன் ஆனார். [12] [13] இந்திய அரசு 26 ஜனவரி 2020 அன்று பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[14]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Pakistani nationality: In 2002, when I couldn't oblige singer Adnan Sami". Jantaka Reporter. 1 January 2016. http://www.jantakareporter.com/entertainment/Pakistani-nationality-in-2002-when-i-couldnt-oblige-singer-adnan-sami/34597/. 
  2. "Adnan Sami to sing in Bengali". Rediff.com. 13 December 2004. http://www.rediff.com/movies/2004/feb/13adnan.htm. 
  3. "Music is the medium of love". Dawn Images. 21 December 2003. http://www.dawn.com/weekly/images/archive/031221/images1.htm. 
  4. "Adnan Sami granted Indian citizenship". The Express Tribune. 31 December 2015. http://tribune.com.pk/story/1019519/adnan-sami-granted-indian-citizenship?amp=1. 
  5. "Adnan Sami: I respect my earlier two wives for the times we shared and for being a part of my life". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Adnan-Sami-I-respect-my-earlier-two-wives-for-the-times-we-shared-and-for-being-a-part-of-my-life/articleshow/47959061.cms. 
  6. 6.0 6.1 "Adnan Sami: Fastest fingers first". The Times of India. 16 April 2001. http://timesofindia.indiatimes.com/articleshow/37852222.cms. 
  7. "Adnan a big hit with Indipop fans". The Tribune. 26 April 2001. http://www.tribuneindia.com/2001/20010426/main8.htm. 
  8. 8.0 8.1 "From the community: Adnan Sami Spectacular Concert was a huge success in Chicago". http://www.chicagotribune.com/suburbs/skokie/community/chi-ugc-article-adnan-sami-spectacular-concert-was-a-huge-suc-2015-04-01-story.html#page=1. 
  9. "Adnan Sami feels Indian". 12 June 2011. http://www.mid-day.com/entertainment/2011/jun/120611-adnan-sami-bollywood-pakistani-singer.htm. 
  10. "Soulful singer". தி இந்து. 6 October 2005. http://www.hindu.com/mp/2005/10/06/stories/2005100600030200.htm. 
  11. "Fitted for fame". தி இந்து. 13 October 2007. http://www.hindu.com/mp/2007/10/13/stories/2007101350730200.htm. 
  12. "Pakistani singer Adnan Sami gets Indian citizenship". The Economic Times. 31 December 2015. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pakistani-singer-adnan-sami-gets-indian-citizenship/articleshow/50394045.cms?from=mdr. 
  13. "Adnan Sami granted indian citizenship". The Express Tribune. 31 December 2015. https://tribune.com.pk/story/1019519/adnan-sami-granted-indian-citizenship/?amp=1. 
  14. "MINISTRY OF HOME AFFAIRS - PRESS NOTE". padmaawards.gov.in. https://padmaawards.gov.in/PDFS/2020AwardeesList.pdf. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அட்னன்_சமி&oldid=8698" இருந்து மீள்விக்கப்பட்டது