அடூர் பங்கஜம்
அடூர் பங்கஜம் (1929 - 26 சூன் 2010) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அடூரில் பிறந்தார்.[1] இவர் துணை நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி அடூர் பவானியும் மலையாள திரைப்படத்துறை நடிகை ஆவார்.[2]
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அடூர் பங்கஜம் |
---|---|
பிறந்ததிகதி | 1929 |
பிறந்தஇடம் | அடூர், திருவிதாங்கூர் |
இறப்பு | 26 சூன் 2010 |
பணி | நடிகை |
பெற்றோர் | கே. இராமன் பிள்ளை, குஞ்சுகுஞ்சம்மா |
துணைவர் | தாமோதரன் போற்றி |
பிள்ளைகள் | அஜயன் |
பங்கஜம் நடித்த மிகவும் குறிப்பிடத்தக்கப் படமாக, தேசிய விருது பெற்ற செம்மீன் உள்ளது. இத்திரைப்படத்தில் இவர் "நல்ல பெண்ணு" எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் புதிய யதார்த்த படமான நியூஸ்பேப்பர் பாய் (1955) படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2008ஆம் ஆண்டில், கேரள சங்கீத நாடக அகாதமி பங்கஜம் மற்றும் பவானி சகோதரிகளின் நாடகம் மற்றும் திரைத்துறை பங்களிப்பிற்காகக் கவுரவித்தது.[3]
இவர் தனது 81ஆவது வயதில் 26 ஜூன் 2010 அன்று இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
அடூர் பங்கஜம் 1925இல் அடூர் பாறப்புறத்து குஞ்சுராமன் பிள்ளை மற்றும் குஞ்சுஞ்சம்மா ஆகியோருக்குப் மகளாகப் பிறந்தார். இக்குடும்பத்தில் மொத்தம் 8 குழந்தைகள். இவர்களில் இரண்டாவது குழந்தையாகப் பங்கஜம் பிறந்தார்.[1] இவரது சகோதரி அடூர் பவானியும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.
குடும்ப வறுமை காரணமாக இவரால் 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. ஆனாலும் தனது 11வது வயது வரை பந்தளம் கிருஷ்ணபிள்ளை பாகவதரிடம் இசைப் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நேரத்தில், இவர் தனது கிராமத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான கோவில்களில் இசைக் கச்சேரி செய்தார்.
12 வயதில், இவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கண்ணூர் கேரள கலாநிலைய குழுவில் நடிக்கத் தொடங்கினார். இவர் 300க்கும் மேற்பட்ட மேடைகளில் மதுமாதுர்யம் என்ற நாடகத்தில் நடித்தார். இவரது அடுத்த நாடகம் ரக்தபந்தம் செங்கன்னூரில் உள்ள ஒரு திரையரங்கின் சார்பில் நடந்தது. இந்த நாடகத்தில், இவர் நகைச்சுவை பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவரது நடிப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கொல்லம் பரத கலா சந்திரிகாவின் உரிமையாளரான தேவராஜன் போற்றியை இந்த குழுவில் பணிபுரிந்தபோது இவர் சந்தித்தார். பின்னர் போற்றியை திருமணம் செய்து கொண்டார். போற்றி பின்னர் பார்த்தசாரதி திரையரங்கம் என்ற மற்றொரு குழுவைத் தொடங்கினார். இந்த குழுவுடன் இவர் பணியாற்றிய காலத்தில், திரைப்படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.
அஜயன் என்ற திரைப்படம்/தொலைக்காட்சி நடிகர் இவரது மகன் ஆவார்.
தொழில்
கலாநிலைய நாடக சபையின் மது மாதுர்யம் என்ற மேடை நாடகத்துடன் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது முதல் திரைப்படம் பாப்பா சோமன் தயாரித்த பிரேமலேகனம். ஆனால் வெளியான முதல் திரைப்படம் போபன் குஞ்சாக்கோ இயக்கிய விசப்பின்றே வில . இவர் கடைசியாக நடித்த திரைப்படம் திலீப் நடித்த குஞ்சிக்கூனன். இவர் தனது வாழ்க்கையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1976 ஆம் ஆண்டில், இவரும் இவரது சகோதரி அடூர் பவானியும் அடூர் ஜெயா திரையரங்கம் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர். பின்னர் இச்சகோதரிகள் பிரிந்தனர்; பவானி குழுவினை விட்டு வெளியேறினார். பங்கஜம் தனது கணவர் தேவராஜன் போற்றியுடன் தொடர்ந்து குழுவினை நடத்தினார். மேலும் அவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாடகக் குழுவினை சிறப்பாக நடத்தி வந்தார்.
2008 ஆம் ஆண்டில், கேரள சங்கீத நாடக அகாதமி பங்கஜம் மற்றும் பவானியை நாடகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக கவுரவித்தது.[3] சபரிமலை அய்யப்பன் திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.
திரைப்படவியல்
1952ஆம் ஆண்டு அச்சன் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர் 2014ஆம் ஆண்டில் தாரங்கள் திரைப்படம் வரை செம்மீன், நீலகிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வருடம் | திரைப்படம் | கதாபாத்திரம் |
---|---|---|
2014 | தாரங்கள் | காப்பக காட்சிகள் |
2006 | அம்மாத்தொட்டில் | |
2004 | சினேகபூர்வம் | |
2003 | மார்க்கம் | |
2002 | அதீனா | |
2002 | குஞ்சிக்கூனன் | |
2001 | சினேகபூர்வம் | அன்னா |
2001 | சூத்திரதாரன் | ரமேசின் பாட்டி |
1998 | குடும்ப வார்த்தகள் | மீராவின் தாய் |
1998 | தடாகம் | மீனாட்சி தல்லா |
1997 | அடுக்கள ரஹஸ்யம் அங்காடி பாட்டு | கரிமேலி |
1996 | கார்பர் | பிளமேனா அம்மாச்சி |
1996 | மயூர நிருத்தம் | பவானியம்மா |
1995 | திரீ மென் ஆர்மி | இந்திரா தேவியின் தாய் |
1995 | அச்சன் ராஜாவு அப்பன் | மரியம்மா |
1995 | தும்போலிகடப்புரம் | காக்கம்மா |
1995 | கதாபுருஷன் | |
1995 | அரபிக்கடலோரம் | அசனின் தாய் |
1995 | ஆலஞ்சேரி தம்ப்ராக்கலள் | கெட்டிலம்மா |
1995 | விருத்தன்மாரே சூக்ஷிக்குக | குசுமாவல்லி |
1993 | வரம் தரும் வடிவேலன்(தமிழ்) | தேவி |
1992 | அஹம் | மாரியம்மா |
1992 | குடும்பசமேதம் | |
1991 | பெரும்தச்சன் | உன்னிமாயா வள்ளியம்மை |
1991 | மேதினம் | மரியா |
1991 | நீலகிரி | முதியம்மா |
1990 | ஏய் ஆட்டோ | பங்கச்சி |
1990 | லால் சலாம் | |
1989 | சுவாகதம் | திருமதி பிள்ளை |
1989 | ஸஜனன்களுடே கொச்சு டாக்டர் | |
1989 | ஆத்தினக்காரே | |
1988 | கண்டதும் கேட்டதும் | |
1988 | ஓணக்கச்சவடம் | |
1987 | அனந்தரம் | லெட்சுமி அம்மா |
1981 | அரிக்காரி அம்மு | |
1981 | வாடகை வீட்டு அதிதி | |
1980 | பாலாட்டு குஞ்சிகண்ணன் | |
1980 | அம்மையும் மகளும் | பிரஹன்னலா |
1980 | தீக்கடல் | கார்த்தியாயனி |
1979 | ராஜவீதி | |
1979 | எடவழியிலே பூச்சா மிண்டா பூச்சா | குஞ்சிக்காளியம்மா |
1978 | சக்கராயுதம் | |
1978 | கடத்தநாட்டு மாக்கம் | |
1978 | ஆறு மணிக்கூர் | |
1978 | படக்குதிரை | |
1978 | வாடக்கக்கொரு ஹ்ருதயம் | கார்த்தியாயனி |
1977 | சூண்டக்காரி | |
1977 | கொடியெற்றம் | |
1977 | கண்ணப்பனுண்ணி | |
1977 | அச்சாரம் அம்மிணி ஓசாரம் ஓமனா | கல்யாணி |
1976 | சென்னாய வளர்த்திய குட்டி | பத்மாட்சி |
1976 | மல்லனும் மாதேவனும் | |
1976 | யக்ஷகானம் | நானியம்மா |
1975 | நீல பொன்மான் | அக்கம்மா |
1975 | நீல சாரி | |
1975 | நாத்தூன் | |
1975 | மா நிஷாதா | |
1975 | தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே | |
1975 | பிரியமுள்ள சோபியா | |
1975 | சுவர்ணமால்யம் | |
1975 | சீனவலா | கார்த்தியாயனி |
1974 | வண்டிக்காரி | |
1974 | தேவி கன்னியாகுமரி | |
1974 | யுவனம் | |
1974 | துர்கா | யசோதா |
1974 | தும்போலார்ச்சா | பொண்ணி |
1973 | ராக்குயில் | மாதவி |
1973 | சுவர்க்கபுத்திரி | மரியகுட்டி |
1973 | பொன்னாபுரம் கோட்ட | கொச்சுகும்மா |
1973 | தேனருவி | கொத்தா |
1973 | பாவங்கள் பெண்ணுங்கள் | |
1973 | யாமினி | தக்ஷாயணி |
1973 | பணிதீராத்த வீடு | உரோசி |
1973 | சாயம் | |
1973 | தொட்டாவாடி | கமலம்மா |
1973 | ஏணிப்படிகள் | |
1972 | ஆத்யத்தே கத | |
1972 | அரோமாலுண்ணி | நாணிப்பெண்ணு |
1972 | பிரதிகாரம் | கமலம் |
1972 | போஸ்ட்மேனே காண்மானில்ல | |
1972 | கந்தர்வக்ஷேத்திரம் | லில்லி |
1972 | ஒரு சுந்தரியுடே கத | பச்சியக்கா |
1972 | ஸ்ரீ குருவாயூரப்பன் | |
1971 | லோறா நீ எவிடே | |
1971 | போபனும் மோளியும் | |
1971 | கரகாணாக்கடல் | தாமசின் அன்னை |
1971 | பஞ்சவன் காடு | நாகேலி |
1971 | அக்னிமிருகம் | கார்த்தியாயினி |
1970 | தத்துபுத்திரன் | அச்சம்மா |
1970 | ஒதேனன்றே மகன் | உப்பாட்டி |
1970 | தாரா | விடுதி காப்பாளர் |
1970 | நிங்கள் ஒரு கம்யூனிஸ்ட் | கமலம்மா |
1970 | பேள் வியூ | இரதி மாதவ |
1969 | உறங்காத்த சுந்தரி | மாதவி |
1969 | சுசி | அச்சம்மா |
1969 | கூட்டு குடும்பம் | சங்கரி |
1969 | ஜுவாலா | பங்கி |
1969 | குமார சம்பவம் | வசுமதி |
1968 | புன்னப்ர வயலார் | பிகே விலாசினியம்மா |
1968 | கொடுங்கலூரம்மா | கொங்கிமாமி |
1968 | ராகிணி | |
1968 | திருச்சடி | அம்முகுட்டி |
1967 | மைனத்தருவி கொலக்கேஸு | ஓரதா |
1967 | காவாலம் சுண்டன் | |
1967 | ஒள்ளதுமதி | |
1966 | ஜெயில் | சங்கரி |
1966 | செம்மீன் | நல்லா பெண்ணு |
1965 | தொம்மன்றெ மக்கள் | மேரிக்குட்டியின் தாய் |
1965 | முதலாளி | |
1965 | கடத்துக்காரன் | நாணியம்மா |
1965 | இணப்பிராவுகள் | மரியா |
1965 | தேவத | பங்கஜாக்ஷி அம்மா |
1965 | ஓடையில் நின்னு | சாரா |
1965 | கொச்சுமோன் | மாது |
1965 | காட்டுதுளசி | கமலம்மா |
1965 | காட்டுப்பூக்கள் | சாரதா |
1965 | சகுந்தலா | |
1964 | ஆத்யகிரணங்கள் | குஞ்சேலி |
1964 | ஆயிஷா | பீட்டு |
1964 | ஆற்றம் பாம் | கல்யாணிக்குட்டி |
1964 | ஓமனக்குட்டன் | பங்கஜாக்ஷி |
1964 | கறுத்த கை | மகேஸ்வரி |
1964 | மணவாட்டி | கல்யாணி |
1964 | அன்ன | |
1964 | பர்த்தாவு | சீதா |
1964 | களஞு கிட்டிய தங்கம் | பங்கஜம் |
1963 | சிலம்பொலி | பாரிஜாதம் |
1963 | ஸ்னாபக யோகன்னான் | ரகேல் |
1963 | சத்யபாமா | ஹரிணி |
1963 | டாக்டர் | தங்கம்மா |
1963 | கலையும் காமினியும் | பங்கி |
1963 | கடலம்மா | காளியம்மா |
1963 | நித்ய கன்னிக | |
1963 | சுசீலா | |
1962 | சினேகதீபம் | கொச்சு நாராயணி/நானி |
1962 | பாக்யஜாதகம் | வேலைக்காரி |
1962 | கால்பாடுகள் | |
1962 | கண்ணும் கரளும் | பருக்குட்டியம்மா |
1962 | பாரியா | ரஹெல் |
1962 | ஸ்ரீராம பட்டாபிஷேகம் | மந்தாரா |
1961 | பக்த குசேல | காமாட்சி |
1961 | ஞானசுந்தரி | கத்ரி |
1961 | கிறிஸ்துமஸ் ராத்திரி | மரியா |
1961 | சபரிமல அய்யப்பன் | பார்வதி |
1959 | நாடோடிகள் | ஜானூ |
1959 | சதுரங்கம் | |
1958 | ரண்டிடங்கழி (திரைப்படம்) | |
1957 | மின்னூன்னதெல்லாம் பொன்னல்ல | கல்யாணி |
1957 | பாடாத்த பைங்கிளி | தேயி |
1957 | தேவ சுந்தரி | |
1956 | கூடபிறப்பு | |
1956 | மந்திரவாதி | மாயாவதி |
1956 | அவர் உணருன்னு | நானி |
1955 | நியூஸ்பேப்பர் பாய் | லட்சுமி அம்மா |
1955 | ஹரிச்சந்திரா | கலகந்தனின் மனைவி |
1955 | கிடப்பாடம் | கைவண்டிகாரன் மனைவி |
1955 | சிஐடி | பங்கி |
1954 | அவன் வருன்னு | மாதவியம்மா |
1954 | அவகாசி | ஷீலாவதி |
1954 | பால்யஸகி | கௌரி |
1953 | சரியோ தெற்றோ | பாரு |
1953 | பூங்கதிர் | ஜானு |
1952 | விசப்பின்றே விளி | மாதவி |
1952 | பிரேமலேகா | தேவகி |
1952 | அச்சன் | பங்கஜம் |
நாடகங்கள்
இவர், பரித்ராநயம், பம்சுலா, ஹோமம், இரங்கா பூசை, பாசுபத்திராஸ்திரம், மதுமதுரையம், இரக்தபந்தம், கல்யாண சித்தி உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்துள்ளார்.
தொகைக்காட்சித் தொடர்
இவர் பரிமாணம் எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Archived copy" இம் மூலத்தில் இருந்து 19 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219081608/http://www.mathrubhumi.com/movies/interview/20006/.
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131202225809/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=6149148&programId=7940855&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3.
- ↑ 3.0 3.1 "Adoor Bhavani, Pankajam to be honoured" இம் மூலத்தில் இருந்து 2011-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110523172656/http://news.webindia123.com/news/Articles/India/20080713/999153.html.