அஞ்சு சதா

அஞ்சு சதா (Anju Chadha) என்பார் இந்திய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம், சென்னையின் பேராசிரியராக உள்ளார்.[1] இவரின் ஆய்வானது உயிரிவினையூக்கி, நொதி செயல் முறைகள், கரிம பொருள் உற்பத்தியில் நொதிகள் சமச்சீரற்ற தொகுப்பில் நொதிகள், பசுமை வேதியியலில் மற்றும் உயிரி உணர்வி துறைகளில் முக்கியமானவை.[2]

அஞ்சு சதா
Anju Chadha
பிறப்பு
அகமதுநகர், இந்தியா
வதிவு
தேசியம்இந்தியன்
Alma mater

ஆரம்ப கால வாழ்க்கை

சதா இந்தியாவில் அகமதுநகரில் பிறந்தார்.[3]

கல்வி

உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மாணவராகத் தேர்வு செய்யப்பட்ட சதா நவ்ரோஸ்ஜி வாடியா கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றபோது, மகாராஷ்டிரா மாநில அரசு இவருக்கு உதவித்தொகை வழங்கியது. கல்லூரியில் வேதியியல் துறையின் பரிசினையும் பெற்றார்.[4] இவர் 1975இல் வேதியியலில் பட்டம் பெற்றார்.[4][2] வேதியியலில் ஆர்வம்கொண்ட இவர் 1977ஆம் ஆண்டில் புனே பல்கலைக்கழகத்தில் தனது முதுநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். 1984ஆம் ஆண்டில், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் உயிர்-கரிம வேதியியலில் கவனம் செலுத்தினார்.[2]

பணி

சதா இந்திய உயிர்-கரிம வேதியியலாளர்கள் சங்கம், இந்திய வேதியியல் ஆராய்ச்சி சங்கம் மற்றும் பெங்களூரின் இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை அறிவியல் அறக்கட்டளையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.[5]

அங்கீகாரம்

மேற்கோள்கள்

  1. "Anju Chadha". http://www.iitm.ac.in/info/fac/anjuc. பார்த்த நாள்: 16 March 2014. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Anju Chadha" இம் மூலத்தில் இருந்து 27 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090527071909/http://biotech.iitm.ac.in/faculty/anjulabsite/anjuchadha.html. பார்த்த நாள்: 16 March 2014. 
  3. "Science – a joyous playing field". http://www.ias.ac.in/womeninscience/LD_essays/67-70.pdf. பார்த்த நாள்: 16 March 2014. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Anju Chadha". http://www.ias.ac.in/womeninscience/anju.html. பார்த்த நாள்: 16 March 2014. 
  5. "Career profile" இம் மூலத்தில் இருந்து 31 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090531041215/http://biotech.iitm.ac.in/faculty/anjulabsite/career.html. பார்த்த நாள்: 16 March 2014. 

 

"https://tamilar.wiki/index.php?title=அஞ்சு_சதா&oldid=25543" இருந்து மீள்விக்கப்பட்டது