அஜீத் கோர்

அஜீத் கோர் (Ajeet Cour பிறப்பு 1934) பஞ்சாபியில் எழுதுகின்ற ஓர் இந்திய எழுத்தாளர். இவர் சாகித்ய அகாதமி விருது மற்றும் இந்திய அரசின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ ஆகியவற்றைப் பெற்றவர் ஆவார்.

வாழ்க்கை

அஜீத் கோர் 1934 இல் லாகூரில் சர்தார் மகான் சிங்கின் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஆரம்ப கல்வியை அங்கேயே பெற்றார். இந்தியப் பிரிப்பிற்குப் பிறகு, இவரது குடும்பத்தினர் டெல்லிக்கு வந்தனர், அங்கு iவர் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

உறவுகளில் பெண்களின் அனுபவம் மற்றும் சமூகத்தில் அவர்களின் நிலை போன்ற சமூக-யதார்த்தமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் மற்றும் சிறுகதைகளை பஞ்சாபியில் எழுதியுள்ளார். [1] இவர் 1985 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதையும் பத்மசிறீ விருதினை 2006 ஆம் ஆண்டிலும் பெற்றார்.[2]

படைப்புகள்

  • கானாபடோஷ்
  • குல்பனோ [3]
  • மெஹக் டி மட்
  • துப் வாலா ஷாஹர்

மேலும் காண்க

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அஜீத்_கோர்&oldid=18734" இருந்து மீள்விக்கப்பட்டது