அச்ரஃப் நினைவு மருத்துவமனை
அச்ரஃப் நினைவு மருத்துவமனை (Ashraff Memorial Hospital) இலங்கையின் கல்முனையில் உள்ள ஓர் அரசு மருத்துவமனை ஆகும். கொழும்பில் செயல்படும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இம்மருத்துவமனை உள்ளது. 2010 ஆம் ஆண்டில் இங்கு 310 படுக்கைகள் இருந்தன. [1] இந்த மருத்துவமனை சில சமயங்களில் கல்முனை தெற்கு முகாம் மருத்துவமனை அல்லது கல்முனை தெற்கு மருத்துவமனை என அழைக்கப்படுகிறது .
சுகாதார அமைச்சு, இலங்கை | |
---|---|
அமைவிடம் | பிரதான சாலை, கல்முனை, அம்பாறை மாவட்டம், கிழக்கு மாகாணம், இலங்கை, இலங்கை |
ஆள்கூறுகள் | 7°24′12.70″N 81°49′51.80″E / 7.4035278°N 81.8310556°ECoordinates: 7°24′12.70″N 81°49′51.80″E / 7.4035278°N 81.8310556°E |
மருத்துவப்பணி | பொது |
நிதி மூலதனம் | அரசு |
அவசரப் பிரிவு | ஆம் |
படுக்கைகள் | 310 |
வலைத்தளம் | [amhkalmunai.org அச்ரஃப் நினைவு மருத்துவமனை Ashraff Memorial Hospital] |
பட்டியல்கள் |
வரலாறு
கல்முனைக்குடி மத்திய மருத்துவமனை 1940 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இந்த மருத்துவமனை 1988 ஆம் ஆண்டு கல்முனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மத்திய மருத்துவமனையாகவும் மகப்பேறு இல்லமாகவும் மாற்றப்பட்டது. 1995 ஆம் ஆண்டில் புற நோயாளிகள் மருத்துவம்னையாகவும் 1996 ஆம் ஆண்டில் ஒரு மாவட்ட மருத்துவமனையாகவும், 1999 ஆம் ஆண்டில் ஒரு இராணுவ மருத்துவமனையாகவும் தரம் உயர்ந்தது. கல்முனை தெற்கு ஆதார மருத்துவமனையாக செயல்பட்டுவந்த இம்மருத்துவம்னை 2002 ஆம் ஆண்டு அச்ரஃப் நினைவு மருத்துவமனை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்பிரதேசத்தின் முன்னணி அரசியல்வாதியான எம்.எச்.எம்.அச்ரஃப்பின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத்தால் மருத்துவமனை கையகப்படுத்தப்பட்டது - முன்னதாக திருகோணமலை மாகாண அரசாங்கத்தால் இது கட்டுப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "Under Line Ministry Beds 2010". Ministry of Health, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2011-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927000434/http://203.94.76.60/nihs/BEDS/Line%20Beds%2010.pdf.