அசும்பு

அசும்பு என்பது நீர் கசிந்தோடும் வாய்க்கால். இது மலைப் பகுதியிலும், வயலோரங்களிலும் கசிந்தோடும். இது பற்றி சங்கப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன.

  • அசும்பில் வள்ளை என்னும் அழல்நிறக் கொடி படர்ந்திருக்கும். அதில் மேயும் இறால் மீன் நெல்வயலில் துள்ளி விழும். [1]
  • அசிம்பின் பகுதியில் வாழைமரம் செழித்து வளரும். [2]
  • வீட்டு முற்றத்தில் அசும்பு ஒழுகும். அங்கு இருந்துகொண்டு கொடை வழங்குதல் ஒருவகை மரபு.[3]
  • திருப்பரங்குன்றத்தில் “தெறிநீர் அருவி அசும்பு” இருந்தது.[4]
  • அசும்பு அருவியாக மாறி பாறை வெடிப்புகளில் விரிந்தோடும்.[5]
  • அசும்பின் கரையில் ஞாழல் என்னும் குங்குமப்பூ மரம் வளரும். அசும்புநீர் தேங்கும் இலஞ்சியில் ஆம்பல் குவளை போன்ற மலர்கள் பூத்திருக்கும்.[6]
வண்டலூர் மலையில் பாயும் அசும்பு

அடிக்குறிப்பு

  1. அகம் 376
  2. வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பு - அகம் 8
  3. நறவு பிழிந்திட்ட கோதுடைச் சிதறல்
    வார் அசும்பு ஒழுகும் முன்றில்
    தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே - புறம் 114
  4. பரிபாடல் 8-128
  5. அசும்பும் அருவி அரு விடர் பரந்த - பரிபாடல் 21-52
  6. ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்
    ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி
    வண்டுண மலர்ந்த குண்டுநீர் இலஞ்சி – மணிமேகலை 8-5
"https://tamilar.wiki/index.php?title=அசும்பு&oldid=16075" இருந்து மீள்விக்கப்பட்டது