அகிலன் (நடிகர்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
அகிலன் (5 செப்டம்பர் 1995) என்பவர் தமிழ்நாட்டு மாதிரி நடிகர், குறும்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[1][2]
அகிலன் | |
---|---|
பிறப்பு | 5 செப்டம்பர் 1995 சென்னை, தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை |
பணி | மாதிரி நடிகர் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2015-தற்போது வரை |
ஆரம்ப வாழ்க்கை
அகிலன் 1995 செப்டம்பர் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் திமுகவில் அரசியல்வாதியாக இருக்கும் புஷ்பராஜுக்கு மகனாகப் பிறந்தார். சென்னையின் செயின்ட் மேரி பாய்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். சென்னை எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், பின்னர் அகிலன் சென்னையில் உள்ள கூத்துப் பட்டறை என்ற நடிப்புப் பள்ளியில் நடிப்பு கலை பற்றி படித்தார்.
நடிப்புத்துறை
2015 இல் ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்த திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இறைவி (திரைப்படம்) (2016), பியார் பிரேமா காதல் (2018) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சென்னையில் ஒரு மழைக்காலம், அடி பெண்ணே போன்ற சில குறும் படங்களிலும் நடித்துள்ளார்.
2019இல் விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அகிலன் என்ற கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கின்றார்.
தொடர்கள்
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | அலைவரிசை |
---|---|---|---|
2019-–ஒளிபரப்பில் | பாரதி கண்ணம்மா | அகிலன் | விஜய் தொலைக்காட்சி |
2019 | ஸ்டார்ட் மியூசிக் | விருந்தினராக | |
எங்கிட்ட மோதாதே 2 | விருந்தினராக | ||
2020 | பாரதி கண்ணம்மா & பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் | அகிலன் |
திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2015 | திரிஷா இல்லனா நயன்தாரா | ||
2016 | இறைவி | ||
சென்னையில் ஒரு மழைக்காலம் | குறும்படம் | ||
உனக்கென நான் | |||
2017 | அடி பெண்ணே | ||
2018 | பியார் பிரேமா காதல் | ||
2019 | கேரமல் கண்ணலே | குறும்படம் | |
ரா | |||
கதிரும் நிலவும் |
மேற்கோள்கள்
- ↑ "படிக்கும் போதே சினிமா ஆசை... அதற்காக எடுத்த பெரிய முடிவு! பாரதி கண்ணம்மா ‘அகிலன்’ பெர்சனல் பக்கம்". நியூஸ் 18. https://tamil.news18.com/news/entertainment/television-bharathi-kannamm-akhil-anjali-vijat-tv-serial-akhil-instagram-sre-533461.html. பார்த்த நாள்: 18 May 2023.
- ↑ "ஷார்ட் பிலிம், சினிமா, சீரியல்… பாரதி கண்ணம்மா அகிலன் லைஃப் ஸ்டோரி". indianexpress. https://tamil.indianexpress.com/lifestyle/vijaytv-bharathi-kannamma-serial-actor-akhil-biography-304138/. பார்த்த நாள்: 18 May 2023.