அகராதி நிகண்டு

அகராதி நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரேவண சித்தர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர். [1]

இந்நூல் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நூற்பாவால் இயற்றப்பட்ட 3334 சூத்திரங்களில், 12,000 சொற்களுக்கு விளக்கம் தருகின்றது.ஒரு சொல் பல பொருள் என்ற வகையில் இது காணப்படுகிறது. இதில் சொற்கள் அகரவரிசையில் அமைந்திருப்பது சிறப்பு. இதுவே அகரவரிசையில் அமைந்த முதல் அகராதி. வீரமாமுனிவர் 18 ஆம் நூற்றாண்டில் அமைத்த சதுரகராதிக்கும் 200 ஆண்டுகள் முந்தியது, ஆனால் செய்யுள் வடிவில் உள்ளது.

உசாத் துணை

சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அகராதி_நிகண்டு&oldid=14454" இருந்து மீள்விக்கப்பட்டது