அகரம் பாலமுருகன் கோயில்
அகரம் பாலமுருகன் கோயில் என்னும் கோயில் கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூர் இராயக்கோட்டை சாலையில் உள்ள அகரம் என்ற ஊரில் உள்ள முருகன் கோயில் ஆகும்.[1] இக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
அகரம் பாலமுருகன் கோயில் | |
---|---|
படிமம்:Balamurugan temple frent face.jpeg | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | அகரம், ஓசூர் வட்டம் |
சட்டமன்றத் தொகுதி: | ஓசூர் |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | பாலமுருகன் |
தாயார்: | வள்ளி, தெய்வானை |
சிறப்புத் திருவிழாக்கள்: | ஆடிக் கார்த்திகை நவராத்திரி கார்த்திகை விளக்கீடு தேர்த்திருவிழா |
வரலாறு
இவ்வூரில் நெடுஞ்சாலை ஒட்டி உள்ள இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகும். இக்கோயியில் குளத்துடன் அமைந்திருந்தது. கோயிலை புதுப்பிக்க எண்ணியவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இக்கோயிலுக்கு பக்கத்திலேயே புதியதாக ஒருகோயிலைக்க்ட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
அமைப்பு
கோயில் வளாகத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சிவன் நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் உள்ள உற்சவர் சன்னதியில் பாலமுருகனையும், வள்ளி தெய்வானை உடனுறை முருகனையும் காணலாம்.
விழாக்கள்
ஒவ்வோராண்டும் ஆடிக் கார்த்திகை அன்று பாலமுருகனுக்கு அபிசேக ஆராதனைகளும் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. புரட்டாசி அமாவாசையை அடுத்துவரும் 9 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்பட்டு, விஜயதசமியன்று உற்சவரின் ஊர்வலம் நடக்கிறது. கார்த்திகை தீபத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது அன்று சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. தைபூசத்தன்று தேர்திருவிழா நடக்கிறது.[2]
மேற்கோள்கள்
- ↑ "அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்". கட்டுரை. தினமலர். பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2018.
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. p. 55.
{{cite book}}
: Check date values in:|year=
(help)