அகப்பேய்ச் சித்தர் பாடல்

அகப்பேய்ச் சித்தர் பாடல் அகப்பேய்ச் சித்தர் என்பவரால் பாடப்பெற்றது. அகப்பேய் எனும் விளியுடன் தொண்ணூறு பாடல்களையுடையது. தத்துவக் கருத்துகளைக் குறிப்புப் பொருளாக அமைத்துப் பாடிய பாங்கினை அகப்பேய்ச் சித்தர் பாடல் காட்டுகின்றது.[1]

அகப்பேய்ச் சித்தர் பாடல் ஒன்று

தன்னை அறியவேண்டும் - அகப்பேய்!
சாராமல் சாரவேண்டும் பிள்ளை
அறிவதெல்லாம் அகப்பேய்!
பேய் அறிவு ஆகும் அடி
ஒப்பனை அல்லவடி - அகப்பேய்!
உன் ஆனை சொன்னேனே!
அப்புடன் உப்பெனவே - அகப்பேய்!
ஆராய்ந்திருப்பாயே!

கருத்து:

தன்னை அறியவேண்டும் - தன்னுடைய இயல்பினை ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியிலே பிளவை (விரிவை) உண்டாக்கும் வழியிலே சேராமல் உண்மை நெறியிலே சேர வேண்டும். நீருடன் உப்புக் கலந்திருப்பதுபோல் இறைவன் இருக்கிறார். தெய்வத்தன்மை இருக்கிறது. இதை ஆராய்ந்து உணர்ந்து ஆனந்தமாய் வாழ்வாயாக. தன்னை அறிவதனால் கடவுளை அறியலாம் என்று கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்.[2]

வெளியீடுகள்

  • பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை (முருகேசநாயகர் 1899, வி. சரவணமுத்துப்பிள்ளை 1907)
  • பதினெண்சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் (அரு இராமநாதன், 1959)

மேற்கோள்கள்

  1. * இந்துக்கலைக் களஞ்சியம் (பொ. பூலோகசிங்கம், 1990, கொழும்பு)
  2. * சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்