24 (தமிழ்த் திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
24
இயக்கம்விக்ரம் குமார்
தயாரிப்புசூர்யா
கதைவிக்ரம் குமார்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புசூர்யா
சமந்தா ருத் பிரபு
நித்யா மேனன்
அஜய்
ஒளிப்பதிவுகிரண் தியோஹன்ஸ்
படத்தொகுப்புபிரவின் புதி
கலையகம்2டி என்டேர்டைன்மென்ட்
விநியோகம்ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்
வெளியீடு6 மே 2016
ஓட்டம்164 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு75 கோடி (US$9.4 மில்லியன்) ஐஅ$11[1]
மொத்த வருவாய்157.10 கோடி (US$20 மில்லியன்) ஐஅ$23[2]

24, இயக்குநர் விக்ரம் குமார் எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் முன்னணி வேடங்களில் சூர்யா, நித்யா மேனன் , சமந்தா ருத் பிரபு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தின் படப்பிடிப்பு 2015 ஏப்ரல் 9 ஆம் தேதி மும்பையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஏற்பாட்டில் தொடங்கியது.[3] இந்த செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.[4] இப்படத்துக்காக மும்பை, போலந்து உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணினிவரைகலைப் (graphics) பணிகள் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றவிட்டன. ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. சூர்யா 3 வேடங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்மாதிரி ஒளிப்படம் மார்ச்சு 4, 2016 அன்று மாலை 6 மணியளவில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.[5]

வெளியிணைப்புகள்

2 D entertainment-இன் பக்கம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=24_(தமிழ்த்_திரைப்படம்)&oldid=29791" இருந்து மீள்விக்கப்பட்டது