11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
வார்ப்புரு:Infobox terrorist attack 11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள் என்பது, 11 ஜூலை 2006[1] அன்று மும்பை புறநகர் இரயில்வேயில் அடுத்தடுத்து 11 நிமிடங்களில், நிகழ்ந்த ஏழு[2] குண்டுவெடிப்புகளைக் குறிக்கும். இக்குண்டுகள் மும்பை மேற்கு புறநகர் இரயில் நிலையங்களிலும் அவற்றுக்கு அருகே உள்ள சாலைகளிலும் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகள் மாலை 6:24 முதல் 6:35 மணிக்குள் நிகழ்ந்தன. இந்நிகழ்வில் குறைந்தது 200[3] பேர் இறந்தனர். மேலும், குறைந்தது 700 பேர் காயமுற்றனர்.
முதலாவதாக கால் இரயில் நிலையத்திலும், அதனைத் தொடர்ந்து மாகிம், மாதுங்கா, ஜோகேஸ்வரி, பூரிவில்லா, பாயண்டர், ராக் மும்பை இரயில் நிலையங்களிலும் குண்டு வெடித்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு இரயில்வேயின் அனைத்து இரயில்களும் நிறுத்தப்பட்டன. மும்பையில் நகர்பேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தில்லி, பெங்களூர், சென்னை உள்பட இந்தியா முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தபட்டது. முக்கிய நகரங்களில் காவல் துறையினர் ரோந்து வந்தனர். விமான நிலையங்களிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
11 ஜூலை 2006 அன்று பகலில் காஷ்மீரில் நடந்த குண்டு வெடிப்பில் 12 பேர் உயிர் இழந்தனர். மாலையில் மும்பையில் குண்டு வெடித்தது.
காயங்களும் இறப்புகளும்
இடம் | நேரம் (இந்திய நேரம்) | இறந்தோர் | காயமுற்றோர் | ஆதாரங்கள் |
---|---|---|---|---|
Khar சாலை | 18:24 | 71 | ||
Bandra | 18:24 | |||
ஜோகேஸ்வரி | 18:25 | 29 | ||
மாகிம் | 18:26 | 22 | ||
பாயண்டர் - மீரா சாலை | 18:29 | 44 | ||
மாதுங்கா சாலை | 18:30 | 24 | ||
பூரிவில்லா1 | 18:35 | 10 | ||
மொத்தம் | 11 நிமிடங்கள் | 200 | 714 | [4] |
1 இந்த இடத்தில் ஒரு குண்டு வெடித்தது. மற்றொன்று காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டது.
|
குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு
மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில், 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் 30 செப்டம்பர் 2015 அன்று தீர்ப்பளித்தது.[5] [6]
குறிப்புகள் மற்றும் ஆதாரங்கள்
- ↑ Dozens killed as at least 7 explosions rock commuter trains in Mumbia, India, 570News, 11 July 2006
- ↑ http://www.ndtv.com/breakingnews/default.asp?refno=7122006121151AM
- ↑ "Death Toll in India Train Bombings at 200". 2006-07-12. http://www.breitbart.com/news/2006/07/12/D8IQFV480.html.
- ↑ "மும்பை இரயில் நிலையங்களில் தொடர் குண்டுவெடிப்புகள்". 2006-07-11. http://in.rediff.com/news/2006/jul/11train.htm. பார்த்த நாள்: 2006-07-11.
- ↑ மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 5 பேருக்கு தூக்கு
- ↑ 2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு