ஸ்ரீஜா சேஷாத்திரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஸ்ரீஜா சேஷாத்திரி
பிறப்பு15 ஆகத்து 1997 (1997-08-15) (அகவை 27)
சென்னை, தமிழ் நாடு, India
பட்டம்பெண் கிராண்ட்மாஸ்டர் (2019)
பிடே தரவுகோள்2219 (ஜனவரி 2021)
உச்சத் தரவுகோள்2306 (ஜூலை 2019)

ஸ்ரீஜா சேஷாத்ரி (பிறப்பு 15 ஆகஸ்ட் 1997), ஒரு இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். பிடே அமைப்பு, ஜூலை 2019 இல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது.

சதுரங்க வாழ்க்கை

ஸ்ரீஜா 2017 இல் பெண் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை பெற்றார் . [1]அவர் தனது முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் நெறியை டிசம்பர் 2016 இல் மும்பையில் நடந்த 2 வது மும்பை சர்வதேசசதுரங்க போட்டியில் பெற்றார். அடுத்து மார்ச் 2017 இல் ஷார்ஜாவில் நடந்த முதுநிலை சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப்பில், அவர் தனது இரண்டாவது பெண் கிராண்ட்மாஸ்டர் நெறிமுறையைப் பெற்றார். ஸ்ரீஜா தனது மூன்றாவது மற்றும் இறுதி நெறிமுறையை ஜூன் 2019 இல் மும்பையில் நடந்த மேயர் கோப்பை சர்வதேச திறந்த சதுரங்க போட்டியில் அடைந்தார். அவருக்கு ஜூலை 2019 இல் அதிகாரப்பூர்வமாக பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்பட்டது. [2]

ஸ்ரீஜா ஜூன் 2018 இல் மும்பையில் உள்ள ஏக்கர்ஸ் கிளப்பில் நடந்த மகளிர் கிராண்ட்மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். [3] ஜூன் 2019 இல் மும்பையில் நடந்த மேயர் கிளப் சதுரங்க போட்டியில் ஒரு சர்வதேச மாஸ்டர் (ஐ.எம்.) நெறி முறையை அவர் பெற்றார். [4] அவர் ஜூலை 2019 இல் தமிழ்நாடு, காரைக்குடியில் நடைபெற்ற 46 வது தேசிய மகளிர்சதுரங்க சாம்பியன்ஷிப்பில் பதினொரு சுற்றுகளில் மொத்தம் எட்டு புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்தார். [5]

மேலும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீஜா_சேஷாத்திரி&oldid=25687" இருந்து மீள்விக்கப்பட்டது