வ. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வ. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர்
வ. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர்
இயற்பெயர்/
அறியும் பெயர்
வ. மு. சே. முத்துராமலிங்க ஆண்டவர்
பிறந்ததிகதி 26-03-1967
அறியப்படுவது எழுத்தாளர்


வ.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர் தமிழ் இணைப் பேராசிரியர், தமிழ் ஆய்வாளர், கவிஞர்

வாழ்க்கைச் சுருக்கம்

1967 இல் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், சேதுமதி தம்பதிகளுக்கு மகனாக இராமநாதபுரத்தில் பிறந்தார். சென்னையில் மாநிலக் கல்லூரியில் (1985-1988} கற்று கலையியல் இளையர்(தமிழியல்) பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையில் முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்று ஐந்தாம் ஜார்ஜ் பரிசினை வென்றவர். ஆய்வியல் நிறைஞர் பட்டத்தினை அதே பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டு முனைவர் பட்டத்தினையும் 1998 இல் பெற்றுக்கொண்டார்.

பணி

சென்னை கந்தசாமி நாயிடு கல்லூரியில் தனது ஆசிரிய பணியை 1996இல் ஆரம்பித்தார்.தொடர்ந்து இருபத்திரண்டு ஆண்டுக்குமேல் சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். பதினைந்துக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட மாணவர்களையும் எழுபதுக்கும் மேற்பட்ட இள முனைவர் பட்ட மாணவர்களையும் நெறியாளராக இருந்து உருவாக்கியுள்ளார்.பன்னாட்டு உள்நாட்டுக் கருத்தரங்குகளில் ஆய்வுத் தலைமையேற்று பல் துறைசார் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிவருகிறார்.

வெளிவந்த நூல்கள்

  • வேர்களும் விழுதுகளும் -தேர்ந்த கவிதைகள் தொகுப்பு -1993
  • உலகளாவிய தமிழ் அமைப்புகள் - பல்நாட்டுத் தமிழுறவு மன்றம் -1996 [1]
  • தமிழ் கவிதைகளில் சமகால வரலாறு -1998
  • துறைதோறும் தமிழ் - ஆய்வு நூல் 1999
  • அன்புள்ள திரு திருடனுக்கு -2000
  • திருவருட் பிரகாச வள்ளலாரின் காலமும் கருத்தும் -2005
  • பன்முகத் தமிழ் - 2005
  • டாக்டர் மு.வ. ஆய்வுக் கோவை
  • முக்கூடல் -2016
  • புதுக்கவிதையில் நற்றிணை -2016

விருதுகள்

2005-06ஆம் ஆண்டின் இளம் அறிஞருக்கான குடியரசுத் தலைவர் விருதாக செம்மொழி விருது பெற்றார்.[2]

மேற்கோள்