வெ. தேவராஜுலு
Jump to navigation
Jump to search
வெ. தேவராஜுலு
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வெ. தேவராஜுலு |
---|---|
பிறந்ததிகதி | 1941 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வெ. தேவராஜுலு (பி: 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். வெ. தேவராசன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் கிறித்துவ சமயப் போதகருமாவார். மேலும் இவர் பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கத் துணைத் தலைவராக 2006 முதல் பணியாற்றி வருகின்றார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சமயபோதனை தவிரச் சமுதாயச் சிந்தனையும், உடல் நலமும் இவர் எழுத்துக்களின் கருப்பொருள்களhகக் காணப்பட்டன. கூடுதலாக சிறுகதைகள், கட்டுரைகள், புதுக்கவிதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
சமய போதனை / உடல்நலம் பற்றிய நூல்கள்
- "உறவாடும் உண்மைகள்"
- "புதிய வாழ்க்கை"
- "நீதியின் பாதையில்"
- "இன்று புதிதாய்ப் பிறந்தோம்"
- "அருட்சுவைக் கதைகள்".
மொழிபெயர்ப்புகள்
- "வேதாகமம் பேசுகிறது";
- "புகைக்குடியை நிறுத்துவது எப்படி?";
- "பொருத்தமான சுகநலம்";
- "மாரடைப்பு வராமல் தடுப்பதெப்படி?"
புதுக்கவிதை நூல்
- "நீரூற்றைத் தேடி" (2006)
பரிசில்களும், விருதுகளும்
- புதுக்கவிதைகள் போட்டிப் பரிசு
- திருமறைக் கல்லூரிப் பரிசு
- மலேசியக் கிறித்துவ எழுத்தாளர் சங்கம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளது (1994).
- "கவியருவி" விருது - தமிழ் நாட்டில் இதய கீதம் இலக்கியப் பொதுநல இயக்கத்தினர் நடத்திய உலகக் கவிஞர் மாநாடு (2000).
- "இறையருட்செல்வர்" விருது - சென்னை கிறிஸ்த்துவ எழுத்தாளர் சங்கம் (2000)
- "எழுத்தாளர் விருது" - கோலாலம்பூர் உலகத் தமிழ்ப் போதகர் மாநாடு (2001)