வீர. விஜயபாரதி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வீர. விஜயபாரதி |
---|---|
பிறந்ததிகதி | மே 29 1974 |
பிறந்தஇடம் | மன்னார்குடி தஞ்சை மாவட்டம்,தமிழ்நாடு |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வீர. விஜயபாரதி (பிறப்பு: மே 29 1974) தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த இவர் பிரகாசம் தொடக்கப் பள்ளியிலும், கணபதி விலாஸ் நடுநிலைப்பள்ளி, தூய வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தனது பள்ளிக் கல்வியைப் பெற்றார். பின்பு மன்னார்குடி இராஜகோபாலசாமி கலைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தினையும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப்பட்டத்தினையும் சிங்கப்பூர் தேசிய கல்விக் கழகத்தில் பிஜிடிஈ டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றார்.
தொழில் நடவடிக்கை
1998 முதல் சிங்கப்பூரிலுள்ள சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகின்ற இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் நன்கு புலமைமிக்கவராவார்.
வகித்த பதவிகள்
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், சிங்கப்பூர் ஆசிரியர் சங்கம் போன்றவற்றில் உறுப்பினராகவும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் செயலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இலக்கியப் பணி
1993ல் எழுதத் தொடங்கிய இவர் புதுக்கவிதைகளையும், மரபுக் கவிதைகளையும் எழுதி வருகின்றார். இவரது முதல் ஆக்கம் ‘புதுமைப் பெண்’ எனும் தலைப்பில் 1994ல் கல்லூரி இதழில் வெளிவந்தது. இதிலிருந்து 100க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். மேலும் பட்டிமன்றங்களில் பங்கேற்பதையும், கவியரங்குகளை நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
சென்னை புதுக் கல்லூரியின் உமறுப் புலவர் மன்ற கவிதைப் போட்டியில் இவரது கவிதைக்கு 1ம் பரிசு மாணவர்களுக்காக இவர் எழுதிய நாடகத்துக்கு சிறந்த கதை, வசனத்திற்கான விருது
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு